டாக்டர் பிரகாஷுடன் தொடர்பா? கொதிக்கிறார் ஷர்மிளா
சென்னை:
செக்ஸ் பட புகழ் டாக்டர் பிரகாஷுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக கணவர் மோகன் புகார்கூறியிருப்பதற்கு வேதனை தெரிவித்துள்ளார் புதிரா, புனிதமாக புகழ் நடிகை ஷர்மிளா.
டாக்டர் மாத்ருபூதத்தின் புதிரா, புனிதமாக நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் டாக்டர் ஷர்மிளா.மருத்துவக் கல்லூரி மாணவியாக இருந்தபோது, மாத்ரூபூதத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,வாசகர்களின் செக்ஸ் தொடர்பான கேள்விகளை முகச் சுளிப்பு, சங்கோஜம் இல்லாமல் இயல்பாககேட்டு அனைவரையும் கவர்ந்தவர்.
அதன் பிறகு அவர் டிவி நடிகை ஆனார். பின்னர் டிவி தயாரிப்பாளரான மோகனை காதலித்துத்திருமணம் செய்து கொண்டார். செக்ஸ் படங்களை இன்டர்நெட் மூலம் விற்றதாக பிடிபட்ட டாக்டர்பிரகாஷுக்கும், ஷர்மிளாவுக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் மோகன், ஷர்மிளா திருமணம் இதனால் தடைபடவில்லை. இந்த நிலையில் மோகனைவிட்டுப் பிரிந்து விட்டார் ஷர்மிளா. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், தனது மனைவிக்கும்டாக்டர் பிரகாஷுக்கும் தொடர்பு இருப்பதாக வந்த செய்தியை மறுப்பதில், ஷர்மிளா ஆர்வம்காட்டவில்லை என்று மோகன் புகார் கூறியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தனது தாய் வீட்டில் வசிக்கும் டாக்டர் ஷர்மிளா இதுகுறித்துக் கூறுகையில், இது மிகவும்வேதனை தருகிறது. என் மீது அபாண்டமாக பழி சொல்லியுள்ளார் மோகன். நான் சமூகத்தில்அனைவரும் மதிக்கும் டாக்டராக இருப்பவள். என்னைப் பற்றி அவர் வாய் கூசாமல்சொல்லியுள்ளதைப் போல நானும் சொல்ல முடியாது.
இருவருக்கும் ஒத்துவரவில்லை, சட்டப்படி பிரிந்து போய் விடலாம் என்று நினைத்து நான்அமைதியாக உள்ளேன். ஆனால் அவர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.நான் என்னதான் மறுப்புதெரிவித்தாலும், எனது பெயர் மோகனால் டேமேஜ் ஆகி விட்டது. எனவே இதுகுறித்து மேலும் பேசவிரும்பவில்லை என்றார் அவர்.


