மாணவிகளிடம் செக்ஸ் குறும்பு செய்த ஆசியர் கைது
திருப்பூர்:
கோவை மாவட்டம் திருப்பூரில், மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்ட ஆசியரைக் கைது செய்யக் கோரிமாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார்.
திருப்பபூர் நகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஆசியராக பணியாற்றி வருபவர் ரத்தின சபாபதி. இவர்இந்தப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் மாணவிகளிடம் முறைகேடாக நடப்பதாகவும் செக்ஸ் வக்கிரத்தில்ஈடுபடுவதாகவும் பலமுறை தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களிடம், மாணவிகள் புகார் கூறியுள்ளனர்.
ஆனால், ஆசிரியரை எச்சரிக்கை செய்வதாகவும் பெரிதாக ஏதாவது நடந்தால் பார்த்துக் கொள்வதாகவும்தலைமை ஆசிரியர் கூறியதாகத் தெரிகிறது.
இதனால் எரிச்சலடைந்த மாணவிகள் பள்ளிக்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைக் கண்டு அதிர்ந்த தலைமை ஆசிரியர், ரத்தின சபாபதியை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
ஆனாலும், அவரைக் கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று மாணவிகள் கூறி விட்டனர்.அவர்களுக்கு ஆதரவாக அவர்களது பெற்றோர்களும் போராட்டத்தில் இறங்கினர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் ரத்தின சபாபதியைக் கைது செய்தனர். இதன் பின்னரே மாணவிகள் போராட்டத்தைக்கைவிட்டனர்.


