வீட்டு மின்சாரத்தின் மீதான 5 சதவீத கூடுதல் வரி ரத்து: பொது மக்கள் அதிருப்தியால் ஜெ. நடவடிக்கை
சென்னை:
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு விதிக்கப்பட்ட 5 சதவீத கூடுதல் வரியை தமிழக அரசு ரத்துசெய்துள்ளது.
சமீபத்தில் தான் இந்த கூடுதல் வரியை அரசு விதித்தது. இதற்கு பொது மக்களிடையே மிகப் பெரிய அதிருப்திநிலவியது. மேலும் இந்த வரிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடந்தன.
இந் நிலையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இந்த வரிவிவகாரம் குறித்து நெடு நேரம் விவாதிக்கப்பட்டது. அப்போது மின்சாரத்தின மீதான வரியால் பல்வேறுபகுதிகளிலும் அதிமுக மீது அதிருப்தி நிலவுவதை அமைச்சர்கள் சுட்டிக் காட்டினர்.
இதையடுத்து 5 சதவீத கூடுதல் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், 5 சதவீத வரிவிதிப்பிலிருந்து, வீடுகளில் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் 1.03 லட்சம் பேர் பயனடைவர். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 101.35 கோடி இழப்பு ஏற்படும்.
பிற மாநிலங்களில் உள்ளதைப் போலத்தான் தமிழகத்திலும் மின்சார வரி அமல்படுத்தப்பட்டது. இருப்பினும்பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இலவச வேட்டி, சேலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு ரூ. 100 கோடியிலிருந்து, ரூ. 120 கோடியாகஅதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் தினம் முதல் இந்தத் திட்டம் மீண்டும்நடைமுறைப்படுத்தப்படும்.
பொங்கலன்று 81 லட்சம் சேலைகளும், 74 லட்சம் வேட்டிகளும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த இலவச வேட்டி, சேலைத் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்குவதுஎனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


