For Daily Alerts
Just In
மின் வாரிய ஊழியர்கள் ஸ்டிரைக் எச்சரிக்கை
சென்னை:
ஊதிய உயர்வு மற்றும் ஊதிய பாக்கி தொடர்பாக மின்வாரியம் உரிய முடிவை அறிவிக்கா விட்டால் அக்டோபர்30ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், 50 சதவீத ஊதிய உயர்வு, ஊதிய நிலுவைஆகியவை குறித்து மின் வாரியத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
கடந்த 1996ம் ஆண்டு முதல் 98ம் ஆண்டு வரையிலான ஊதிய நிலுவைத் தொகையை கடந்த ஜூலை மாதம் 7ம்தேதியே கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை தரவில்லை.
இதே போல, ஊதிய திருத்தம் தொடர்பாகவும், ஊழியர்களுடன் பேச்சு நடத்த நிர்வாகம் முன்வர வேண்டும்.இல்லாவிட்டால் அக்டோபர் 30ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டி வரும் என்றுகூறப்பட்டுள்ளது.


