For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மண்டியிட வைக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட பஞ்சாயத்தார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Suganthiபஞ்சாயத்துக்காரர்களால் கொளுத்தும் வெயிலில் 5 மணி நேரம் மண்டியிட வைக்கப்பட்ட பெண்ணிடம்,நீதிபதியின் உத்தரவி பேரில் மன்னிப்புக் கேட்டனர் பஞ்சாயத்தினர்.

இந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை குறித்து நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே உள்ள வலையபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. இவர்தொலைத் தொடர்புத் துறையில் இளநிலை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராஜேந்திரன்என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

ராஜேந்திரன் நெய்வேலி அணல் மின் நிலையத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இடையில்ராஜேந்திரன் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பினார். அப்போது சுகந்திக்கும் பிற ஆண்களுக்கும் தொடர்புஇருப்பதாக சிலர் ராஜேந்திரனிடம் கூறினர்.

இதை நம்பிய ராஜேந்திரன் சுகந்தியை கொடுமைப்படுத்தத் தொடங்கினார். மேலும் பணம் கேட்டும் அடிக்கடிசுகந்தியை துன்புறுத்தினார். இதையடுத்து கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு, இருவரும் பிரிந்துவாழ்ந்தனர்.

தனது தாயாருடன் தனியே வசிக்க ஆரம்பித்த சுகந்தி, விவாகரத்து வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடினார்.

ஆனால் இதை ஏற்க மறுத்த ராஜேந்திரன் மனைவி மீது ஊர்ப் பஞ்சாயத்தில் புகார் செய்தார் ராஜேந்திரன்.

இதைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சுகந்திக்கு பஞ்சாயத்துத் தலைவர் உத்தரவிட்டார்.

ஆனால், நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளதால் இந்த விஷயத்தில் பஞ்சாயத்து முன் ஆஜராக மாட்டேன் என்றுகூறிவிட்டார் சுகந்தி.

இதைத் தொடர்ந்து அவரை ஊரை விட்டு விலக்கி வைக்கப் போவதாக பஞ்சாயத்துக்காரர்கள் மிரட்டினர். மேலும்பல விதத்திலும் நெருக்குதல் கொடுத்து பஞ்சாயத்திற்கு வரவழைத்தனர்.

அங்கு அவருக்கு ஊர்க் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதற்காக ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டது.அபராதம் கட்டுவதைத் தவிர்க்க விரும்பினால், பஞ்சாயத்து உறுப்பினர்கள் முன் சுடுமணலில் மண்டியிட வேண்டும்என்றும் உத்தரவிடப்பட்டது.

ஊர்க்காரர்களின் கட்டாயம் காரணமாக, கொளுத்தும் வெயிலில் அவர் மண்டியிட்டார். மேலும் பஞ்சாயத்துஉறுப்பினர்கள் ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கவும் பணிக்கப்பட்டார்.

காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தனது தாயார் கிருஷ்ணம்மாளுடன் கடும் வெயிலில் மண்டியிடவைக்கப்பட்ட சுகந்தி மயங்கி விழுந்தார். ஆனால், அவருக்கு தண்ணீர் தரக் கூட விடவில்லைபஞ்சாயத்துக்காரர்கள். இந்தக் கொடுமைக்குப் பின் அபராதத் தொகை ரூ. 19,000 ஆகக் குறைக்கப்பட்டது. இந்தத்தொகையை பஞசாயத்தாரிடம் செலுத்தினார் சுகந்தி.

தனது குழந்தைகள் மற்றும் கணவரின் உறவினர்கள் முன்னிலையில் சுகந்திக்கு இந்தக் கொடுமை நடந்தது.

Judge Karpaga Vinayagamஇதையடுத்து சுகந்தி தனது தாயாருடன் துறையூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென் புகார் தந்தார். இதைத்தொடர்ந்து ராஜேந்திரன் மற்றும் ஊர்ப் பஞ்சாயத்துக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாவட்டஎஸ்.பியும் இந்த வழக்கில் துரித நடவடிக்கை எடுத்தார்.

இதையடுத்து தாங்கள் கைது செய்யப்படுவோம் என்று அஞ்சிய ராஜேந்திரன், அவரது தாயார், மைத்துனர்உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 5 பேரும், பஞ்சாயத்தார் 12 பேரும் முன் ஜாமீன கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கற்பக விநாயகம் முன் விசாரணைக்கு வந்தது. பஞ்சாயத்தார் செய்த கொடுமை குறித்துஅறிந்து கடுப்பான நீதிபதி, பஞ்சாயத்தாரும், ராஜேந்திரனின் குடும்பத்தினரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்என்று உத்தரவிட்டார்.

மேலும் சுகந்தியிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையை நீதிமன்றத்தில் கட்டவும் உத்தரவிட்டார். இதையடுத்துதீர்ப்பு வழங்கிய நீதிபதி கூறியதாவது:

சுகந்தியை பல மணி நேரம் மண்டியிட வைத்து கொடுமைப்படுத்தியுள்ளீர்கள். அதுவும் அவரது குழந்தைகள்முன்பே இந்தக் கொடுமை நடந்துள்ளது. இதனால் குழந்தைகளின் மன நிலை எப்படி பாதிக்கப்படும் என்பதுதெரியுமா?

கம்ப்யூட்டர் காலத்தில் போய் உச்சி வெயிலில் மண்டியிட வைத்தும், காலில் விழ வைத்து ஒரு பெண்ணைஅவமானப்படுத்தியுள்ளீர்கள். உங்களுக்கு யார் இந்த அதிகாரத்தைத் தந்தது.

சுகந்தியிடம் பஞ்சாயத்தார் ஒவ்வொருவராக வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். சுகந்தியின் தாயார்கிருஷ்ணம்மாளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தால், பஞ்சாயத்தாரை தமிழகத்தை விட்டே வெளியேற உத்தரவிட்டுவிடுவேன். நீங்கள் இங்கு வசிக்கவே முடியாத நிலையை உருவாக்கிவிடுவேன்.

இதையும் மீறி உங்களால் ஏதாவது பிரச்சனை வந்தால் சுகந்தி உடனே இந்த நீதிமன்றத்தை அணுகலாம் என்றார்நீதிபதி மிகக் கடுமையான குரலில்.
இதையடுத்து அந்தப் பஞ்சாயத்துக் கும்பல் நீதிமன்றத்திலேயே சுகந்தியிடம் மன்னிப்புக் கேட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X