For Daily Alerts
Just In
டிஸ்மிஸ்: நீதிபதிகள் குழு விசாரணை தொடர்கிறது
சென்னை:
தீபாவளிக்குள் விசாரணையை முடித்து விட்டு மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான 3 நீதிபதிகள் குழுவிசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று கோவை ஊழியர்களிடம் தொடர்ந்து இரண்டாவது நாளாகவிசாரணை நடக்கிறது.
அங்கன்வாடி ஊழியர்கள் இன்றைய விசாரணையில் கலந்து கொண்டனர். விசாரணைக்குப் பின் அவர்கள்செய்தியாளர்களிடம் பேசுகையில், விசாரணை சுமுகமாக நடக்கிறது. வரும் தீபாவளிப் பண்டிகைக்குள்விசாரணையை முடித்து, அரசு ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅவர்கள் கூறினர்.
ஆனால் அக்டோபர் 31ம் தேதி வரை அரசு ஊழியர்களிடம் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

