ஆற்காடு வீராசாமியின் சொத்துக்கள்: மதிப்பிடும் பணியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்
சென்னை:
முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்களை மதிப்பீடு செய்யும்பணியில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
பொதுப் பணித்துறை அதிகாரிகள் உதவியுடன் இன்று காலை முதல் ஆறகாடு வீராசாமியின் கீழ்ப்பாக்கம்,அண்ணா நகர் பங்களாக்கள், அவரது தம்பி தேவராஜனின் அண்ணா நகர் வீடு பங்களா, அவரது மனைவியின்லாயிட்ஸ் காலனி வீடு ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வீடுகளில் அடிக்கடி லஞ்ச ஒழிப்புப் போலீஸார்சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் ஆற்காடு வீராசாமி, அவரது தம்பி ஆகியோரின் வீடு,அலுவலகங்களில் சோதனை நடந்தது.
நேற்றும் கூட கண்டோன்மென்ட் சண்முகம் உள்ளிட்ட இரு முன்னாள் திமுக எம்.எல்.ஏக்களின் வீடுகளிலும் ரெய்ட்நடந்தது.
இந் நிலையில் ஆற்காடு வீராசாமியின் சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பித்துள்ளது.
இன்னும் நான்கு நாட்களுக்கு இந்தப் பணிகள் தொடரும் என்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தெவித்தனர்.

