For Daily Alerts
Just In
தடுமாற்றம் ஏன்?: திமுகவுக்கு மார்க். கம்யூ. கேள்வி
சென்னை:
மத்திய அரசின் கொள்கைகளை ஆதரிப்பதா, இல்லையா என்று முடிவெடுப்பதில் திமுக தடுமாறுகிறது என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்திய அரசின் பொருளாதார மற்றும் தொழிற் கொள்கைகுறித்து திமுகவின் நிலை திடமாக இல்லை. மத்திய அரசின் கொள்கைகளை ஆதப்பதா, வேண்டாமா என்றுமுடிவெடுப்பதில் அது தடுமாறுகிறது.
மத்திய அரசின் தனியமார் மயமாக்கல் கொள்கையை எதிர்த்து டிசம்பர் 1ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம்நடத்தப் போவதாக திமுக அறிவித்துள்ளது. ஆனால் இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை.
காரணம், பொதுத் துறைகளை தனியாருக்கு விற்கும் நடவடிக்கைகள் படு வேகமாக நடந்து வருகின்றன. இதைச்செய்வது திமுக இடம் பெற்றுள்ள மத்திய ஆட்சி தான்.


