For Daily Alerts
Just In
ஆடு, அரிவாள்களுடன் பலியிடச் சென்ற 27 பேர் கைது
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கிடா வெட்டும் போராட்டம் நடத்திய 27 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
உசிலம்பட்டி அருகே உள்ளது முண்டுவேலம்பட்டி. இந்தக் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் புரட்டாசிவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் விழா நடந்து வருகிறது. ஆனால், கிடா வெட்டுக்குப்போலீஸார் தடை விதித்தனர்.
இதையடுத்து கிடா வெட்டும் போராட்டம் நடத்தப் போவதாக விவசாய விடுதலை முன்னணி என்ற அமைப்புஅறிவித்தது. அதன்படி நேற்று 10 ஆடுகளுடன் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோவிலை நோக்கிஊர்வலமாக வந்தனர்.
ஆடும், அரிவாளுமாக வந்த 27 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆடுகளையும்பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கட்டி வைத்துள்ளனர்.


