மலையாள திருக்குறள்: காளிமுத்து வெளியிட்டார்
சென்னை:
மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை சபாநாயகர் காளிமுத்து சென்னையில் வெளியிட்டார்.
உலகப் பொதுமறை திருக்குறள், உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மலையாளத்திலும்ஏற்கனவே மொழி பெயர்க்கப்பட்டிருந்தாலும், தற்போது தான் முழுமையான அளவில் புத்தக வடிவில்வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மலையாள மொழியாக்கத்தை எம்.ஆர்.ஆர். வாரியர் என்பவர் செய்துள்ளார்.
மலையாள திருக்குறள் நூலின் வெளியீடு சென்னையில் நடந்தது. சபாநாயகர் காளிமுத்து புத்தகத்தை வெளியிடபிரபல மலையாள எழுத்தாளர் தேவன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் காளிமுத்து பேசுகையில், மாபெரும் புலவர் திருவள்ளுவரின் சாகாவரம் படைத்த திருக்குறளைதங்களது தாய் மொழியிலேயே முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு மலையாளிகளுக்கு தற்போது கிடைத்துள்ளது.
தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல திருக்குறள். உலகப் பொதுமறையாக இது விளங்குகிறது. ஒட்டுமொத்தமனிதகுலத்திற்கே சொந்தமானது திருக்குறள் என்றார்.
கேரள அமைச்சர் எம்.எம்.ஹசன் பேசுகையில், ஜாதி, மொழி, மதம், இனங்களைக் கடந்தது திருக்குறள் என்றுபுகழாரம் சூட்டினார்.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications