For Daily Alerts
Just In
ரஜினிகாந்த்- தேவ கெளடா ரகசிய சந்திப்பு
பெங்களூர்:
முன்னாள் பிரதமர் தேவ கெளடாவை நடிகர் ரஜினிகாந்த் ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளார்.
பெங்களூர் பத்மநாப நகரில் உள்ள தேவ கெளடாவின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்தது.
திங்கள்கிழமை மாலையில் தேவ கெளடாவின் வீட்டிற்கு திடீரென வந்த ரஜினிகாந்த், சுமார் 2 மணி நேரம்அவருடன் தனியே பேசிவிட்டுத் திரும்பினார்.
இந்தச் சந்திப்பின்போது இருவரும் தேசிய அரசியல் குறித்து விவாதித்தாகத் தெரிகிறது. மேலும் தமிழக அரசியல்சூழல் குறித்தும் பேசிய கெளடா, ரஜினியை அரசியலில் நுழையவும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

