For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சாயத்தார் கொடுமை தாங்காமல் தலித் வாலிபர் தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள அகரம் காலனி கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்,பஞ்சாயத்தார் கொடுத்த தீர்ப்பினால் அவமானமடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகம் முழுவதும் மரத்தடி பஞ்சாயத்துத் தீர்ப்புகளுக்கும், அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் கடும்எதிர்ப்புக் கிளம்பி வருகிறது. சமீபகாலமாக இந்தத் தீர்ப்புகளால் பல உயிர்கள் பலியாகியுள்ளன. இதனால்பஞ்சாயத்துகளைத் தடை செய்ய சட்டம் கொண்டு வருமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரைகூறியுள்ளது.

சட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்வதாக தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால், கிராம மக்களின்ஓட்டுகளையே பெருமளவில் நம்பியுள்ள அதிமுக அரசு, இந்த ஓட்டுகளை மனதில் கொண்டு சட்டம் கொண்டுவருவதில் வேகம் காட்டத் தயங்கி வருகிறது.

இந் நிலையில் கிராமப் பஞ்சாயத்து வழங்கிய தீர்ப்பினால் அவமானமடைந்த வாலிபர் ஒருவர் தற்கொலைசெய்துள்ளார்.

அகரம் காலனியைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம். பெரும் பணக்காரர். இவர் தனது தென்னந்தோப்பில் இருந்த சிலதேங்காய்கள் திருட்டுப் போய் விட்டதாகவும், அதற்கு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சத்யநாதன் (24), பழனி,முருகேசன் ஆகியோர்தான் காரணம் என்றும் ஊர்ப் பஞ்சாயத்தில் புகார் கொடுத்தார்.

பஞ்சாயத்தார் இந்த 3 பேரையும் அழைத்து விசாரித்தனர். பின்னர் 3 பேரும் குற்றவாளிகள் என்று கூறி,அவர்களுக்குத் தண்டனையும் கொடுத்தனர். அதன்படி இந்த 3 பேரும் விளக்குக் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுஅடிக்கப்பட்டனர். சிலர் செருப்புகளையும் கொண்டு அடித்துள்ளனர்.

பின்னர் அவர்களது கழுத்தில் தேங்காய் மாலை போடப்பட்டு, தெருவில் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டனர். அப்போது ஊர் மக்களையும் தூண்டிவிட்டனர் பஞ்சாயத்தார். இதையடுத்து மக்களும் கையில்கிடைத்த பொருகளைக் கொண்டு அவர்களை அடித்தனர்.

மூவருமே தலித்கள் என்பதால் அவர்களது ஜாதியைச் சொல்லித் திட்டியும் கேவலமாகப் பேசியும் மேல் ஜாதிக்கும்பல்கள் தாக்கின.

இதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். உடலெங்கும் பலத்த காயங்களுடன் ஊர் மக்கள் மற்றும் கட்டைப்பஞ்சாயத்து கும்பலால் அவமானப்படுத்தப்பட்ட இந்த மூவரும் அழுதவாறே வீடுகளுக்குத் திரும்பினர்.

இந்த அவமானத்தைத் தாங்க முடியாத சத்யநாதன் வீடு திரும்பியதும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மற்ற இருவரும் பலத்த காயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சத்யநாதனின் மனைவி ராதிகா, போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்துமாணிக்கவாசகம் உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஆனால், இவர்கள் மேல் ஜாதியினர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படுவது சந்தேகமே.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X