For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொடா சட்டத் திருத்தம் எனக்கு எதிரானது: ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொடா சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொடா சட்டத்தைத் திருத்தம் மத்திய அரசின் முடிவு, அச்சட்டம் கொண்டு வந்ததன் நோக்கத்தையே பலனற்றதாக்கிவிடும். தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளும்பயனின்றிப் போய்விடும்.

மத்திய அரசின் நடவடிக்கை மிகவும் கண்டனத்துக்குரியது. சட்டத்தைத் திருத்துவதால் தற்போது பொடாசட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்குகள் பாதிக்கப்படும்.

மாநில அரசுகளின் பொடா ஆய்வுக் குழுவின் முடிவுகளை மாற்றியமைக்கும் உரிமை, மத்திய ஆய்வுக் குழுவுக்குஉள்ளதாக புதிய சட்டத் திருத்தம் கூறுகிறது. அது மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயலாகவேஅமையும்.

பயங்கரவாதத்தில் ஈடுபடுவோர், அவர்களுக்கு ஆதரவு தருவோர், பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்போரைஒடுக்கவே பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த உயரிய நோக்கத்தையே சிதறடிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வருகிறார்கள்.

மேலும், தமிழக அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக எடுத்தும் வரும் நடவடிக்கையை ஒடுக்கவே இந்த சட்டத்திருத்தம் குறிப்பாக கொண்டு வரப்படுவதாக நான் நினைக்கிறேன்.

நான் கடந்த முறை முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளும், தீவிரவாதிகளின்நடமாட்டமும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. விடுதலைப் புலிகளின் நடவடிக்கை முற்றிலும் ஒடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் எனக்குப் பின்னால் ஆட்சியில் இருந்த திமுக ஆட்சியின்போது விடுதலைப் புலிகள் மீண்டும் உலவஆரம்பித்து விட்டனர். கடந்த 2001ம் ஆண்டு மே மாதம் முதல் எனது அரசு எடுத்து வரும் கடுமையான, உறுதியானநடடிக்கைகள் காரணமாக, தீவிரவாதம், ஜாதி மோதல்கள், மத மோதல்கள், மொழி மோதல்கள் எதுவும் இல்லாமல்தமிழகம் அமைதியாக உள்ளது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், தடை செய்யப்பட்ட இயக்கமான எல்.டி.டி.ஈ ஆதரவாளர்கள் மற்றும் அதன்உறுப்பினர்கள், தமிழ் தேசிய மீட்புப் படை, தமிழ்நாடு விடுதலைப் படை ஆகியவற்றுடன் இணைந்துதங்களுடைய தீவிரவாத செயல்பாடுகளை தமிழகத்தில் தொடர்ந்தனர்.

இத்தகைய நிலையில் முதல்வரான நான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒரேநோக்கில்தான், மத்திய அரசு கொண்டு வந்த பொடா சட்டத்தை ஆதரித்தேன். அச் சட்டத்தினால், தீவிரவாதநடவடிக்கைகளும், அதற்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களின் நடவடிக்கைகளும் தமிழகத்தில் கட்டுக்குள்கொண்டு வரப்பட்டன.

ஆனால், இப்போது பொடா சட்டத்தை திருத்த மத்திய அரசு முயல்கிறது. இது பயங்கரவாத சக்திகளுக்கு ஊக்கம்தருவதாக அமையும். மேலும், சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாடுகளை மத்திய பொடா ஆய்வுக் குழு ஆய்வுசெய்வது, நீதித்துறையின் செயல்பாடுகளில் தலையிடுவது போலாகும்.

மொத்தத்தில், பொடாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டால் அந்த சட்டத்தையே கேலிப் பொருளாக்கி விடும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X