For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜார், லூயி, ஹிட்லர், முசோலினியை மிஞ்சிவிட்டார் ஜெ.: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜார் மன்னன், லூயி மன்னன், சோலினி, ஹிட்லர் ஆகிய சர்வாதிககளை இணைத்துப் பார்த்தாலும்ஜெயலலிதாவுக்கு ஈடாக மாட்டார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பத்திக்கையாளர்கள் மீது கைது நடவடிக்கை, பரிதிஇளம்வழுதியை சட்டசபை வளாகத்திலேயே கைது செய்து சிறையில் அடைத்திருப்பது ஆகியவற்றைப் பார்க்கும்போது ஜார் மன்னன், லூயி மன்னன், முசோலினி, ஹிட்லர் ஆகியோரை இணைத்துப் பார்த்தாலும், தனக்கு ஈடாகமாட்டார்கள் என்று ஜெயலலிதா நிரூபித்துள்ளார்.

ஜனநாயக வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள். மக்கள் விரோத செயலை மமதையுடன் நடத்தியிருக்கிறார்ஜெயலலிதா.

பேசும் நாக்குகளையும், எழுதும் பேனாக்களையும் அராஜகத்தால் அடக்க நினைக்கும் ஜெயலலிதாவின் ஆணவம்வீழும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதிமுக அரசின் அராஜகப் போக்கால் அதிருப்தியடைந்துள்ள மக்கள்கடைசிக் கட்டமாக போராட்டக் களத்தில் குதிக்க முடிவு செய்து விட்டார்கள்.

இந்த உணர்வை வருகிற 12ம் தேதி நிடக்கவுள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் காட்டவேண்டும். மிகவும் அமைதியாகவும், பிரச்சினைகளின்றியும் இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

முன்னதாக நிருபர்களிடம் பேசிய அவர், ஜனநாயகத்தில் இது ஒரு கருப்பு தினம். ஜனநாயகத்தை இந்த அரசு குழிதோண்டி புதைத்துவிட்டது. இது மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பத்திரிக்கைகளை ஒடுக்கிவிட்டால், தாங்கள் நினைப்பதை செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இதுகுறித்து மத்திய அரசிடம் பேசுவோம். ஒரு அரசைக் கலைக்க இதைவிட போதுமான காரணங்கள் ஏதும் இல்லை.எம்.எல்.ஏவான பரிதிக்கு அடுக்கடுக்காய் சிறை தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

வாஜ்பாய், அத்வானியிடம் திமுக, மதிமுக மனு:

இந்து மற்றும் முரசொலி பத்திக்கையாளர்கள் மீது சபாநாயகர் பிறப்பித்துள்ள கைது உத்தரவைக் கண்டித்தும், இதுதொடர்பாக மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திமுக, பா.ம.க., மதிமுக கட்சிகளின் எம்பிக்கள்திங்கள்கிழமை பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானியிடம் புகார் மனு கொடுக்கவுள்ளனர்.

மேலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் திமுக எம்.எல்.ஏக்களும் ஜி.கே. மணிதலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏக்களும் பிரதமரைச் சந்திக்க உள்ளனர்.

டெல்லியில் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் மல்ஹோத்ரா, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயபால் ரெட்டிஆகியோரும் இந்த கைது, ரெய்ட் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் இது ஜனநாயகத்தில் ஒரு கருப்பு தினம் என்றார்.

இச் சம்பவத்தைக் கண்டித்து வரும் 12ம் தேதி நடத்தப்படவுள்ள மனிதச் சங்கிலி போராட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X