For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராம் வீட்டு காவலாளியை கொல்ல போவதாக போலீஸ் மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்து பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் என். ராம் வீட்டுக் காவலாளிக்குப் போலீசார் கொலை மிரட்டல்விடுத்துள்ளனர். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் கொடுக்கப் போவதாக ராம் தெரிவித்தார்.

ராம் கூறியதாவது:

போலீஸார் இந்து அலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்து மாலினி பார்த்தசாரதியை மேஜைக்கு அடியிலெல்லாம்தேடினர். காவல் துறையினர், எங்கள் வீட்டுக் காவலாளியிடம் முரளி, மாலினி ஆகியோரின் முகவரி மற்றும் கார்நம்பரைக் கேட்டு மிரட்டியுள்ளனர். பதில் சொல்லா விட்டால் என்கவுண்டர் செய்து கொன்று விடுவோம் என்றுமிரட்டியுள்ளனர்.

இது குறித்துப் புகார் கொடுத்துள்ளேன். மேலிட உத்தரவால்தான் அவர்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்கின்றனர். இச் செயல்களுக்கு கமிஷனர் விஜயகுமார், டி.ஜி.பி. கோவிந்த் போன்றவர்கள் தான்பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு தலைமை (ஜெயலலிதா) ஒரு உத்தரவை இடுகிறது. அந்த உத்தரவுதவறாக இருந்தால் அதைச் செய்ய முடியாது என்று கூற வேண்டும். அல்லது மத்திய அரசுக்காவது கடிதம் எழுதவேண்டும்.

அதற்கு மேலும் நிர்பந்திக்கப்பட்டால் பதவி விலக வேண்டும். நானாக இருந்தால் அதைத் தான் செய்வேன்.அதைவிட்டுவிட்டு தலைமை சொல்கிற முறைகேடான உத்தரவுகளுக்கு எல்லாம் போலீஸ் அதிகாரிகள்தலையாட்டிக் கொண்டிருக்கக் கூடாது. இதற்கான விலையை அந்த அதிகாரிகள் நிச்சயம் கொடுக்கவேண்டியதிருக்கும்.

இந்து அலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்தது, காவலாளியை மிரட்டியது மற்றும் பெங்களூரில் தமிழக காவல்துறையினர் முறை கேடாக நடந்தது குறித்தும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் அனுப்ப உள்ளோம்என்றார் ராம்.

நிருபர்கள் அவரிடம், 356 வது சட்டப்படி தமிழக அரசைக் கலைக்கும் படி கோரிக்கை வைப்பீர்களா ? என்றுகேட்டதற்கு, அதுபோன்ற கோரிக்கையெல்லாம் வைக்கப்போவதில்லை. அது என் வேலை இல்லை என்றுபதிலளித்துள்ளார்.

இந் நிலையில் பெங்களுரில் ராம் சென்ற காரை நடு ரோட்டில் வழிமறித்து முறைகேடாக நடந்து கொண்ட தமிழகபோலீசார் பயன்படுத்திய கே.ஏ-04 ஏ 4334 என்ற காரை பெங்களூர் நகரப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர் .அதன் ஒட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் வந்த தமிழக போலீசார் எஸ்கேப் ஆகிவிட்டனர். அதே நேரத்தில் இவர்கள் போலீசார் தானா அல்லது வேறுஏதாவது கும்பலா என்ற சந்தேகமும் தங்களுக்கு இருப்பதாக பெங்களூர் போலீசார் கூறுகின்றனர்.

இந் நிலையில் முரசொலி செல்வம் பெங்களூரில் தான் இருப்பதாகவும் அவரைக் கைது செய்ய தமிழக போலீசார்வருவது குறித்து திமுக தலைமை, முதல்வர் கிருஷ்ணாவுடன் பேசியதாகவும், இதையடுத்து அவரை கிருஷ்ணாவேபத்திரமாக ஒரு அமைச்சரின் கையில் ஒப்படைத்து பாதுகாத்து வருவதாகவும் கூறப்படுகிறது. கைதுக்குத் தடைவிதித்து நீதிமன்ற உத்தரவு வெளியாகி இருக்கும் நிலையில் இனிமேல் தான் செல்வம் வெளியில் தலை காட்டுவார்என்று கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X