For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிலிம் சிட்டியில் புதிய டிஜிபி அலுவலகம் கட்ட அரசு முடிவு: கமிஷன் அடிக்க முயற்சி- கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மெரீனா கடற்கரையோரம் காமராஜர் சாலையில் உள்ள தமிழக காவல்துறை தலைவர் (டிஜிபி)அலுவலகம் தரமணியில் உள்ள திரைப்பட நகருக்கு மாற்றப்படுகிறது. அங்கு ரூ. 30 கோடியில் புதிய அலுவலகம்கட்டப்படவுள்ளது.

காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் மிகவும் பழமையான கட்டடம் ஆகும். அங்கு பல அறைகள்பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் டிஜிபி அலுவலகத்தின் பல்வேறு பிரிவு அலுவலகங்களும்வெவ்வேறு இடத்தில் செயல்பட்டு வருகின்றன.

இந் நிலையில் டிஜிபி அலுவலகத்தை தரமணி திரைப்பட நகருக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது உள்ள டிஜிபி அலுவலகம் மூடப்படும். அங்கு காவலர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.இதற்குப் பதிலாக தரமணி திரைப்பட நகரில் உள்ள 24 ஏக்கர் நிலப்பரப்பில், 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதியடிஜிபி அலுவலக வளாகம் கட்டப்படும். ரூ. 30 கோடி செலவில் இந்த கட்டடம் கட்டப்படும்.

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் இந்த அலுவலக வளாகத்தைக் கட்டும். நிர்வாக வசதிக்காகவே இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளதாாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச்செயலகம் அமையவிருப்பதால், அதற்கு அருகாமையில் இருக்கும் பொருட்டு டிஜிபி அலுவலகம் தரமணிக்குமாற்றப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

புதிய கட்டட வளாகத்தில் டிஜிபி அலுவலகம், போலீஸ் வானொலி மற்றும் நுண்அலை தொலைத் தொடர்புஅலுவலகம், பராமரிப்புப் பிரிவு அலுவலகம், கடற்கரை பாதுகாப்பு அலுவலகம், தமிழ்நாடு தடய அறிவியல்துறை அலுவலகம் ஆகியவற்றுடன் இடவசதியின்மை காரணமாக தற்போது வெவ்வேறு இடங்களில் உள்ளகுற்றப்புலனாய்வுத் துறை, பொருளாதார குற்றப்பிரிவு, போலீஸ் தனிப்பிரிவு ஆகிய அலுவலகங்களும், குடிமைப்பொருள் வழங்கல்(குற்றப் புலனாய்வு), ஊர்க்காவல் படை மற்றும் சமூக பாதுகாப்புப் பிரிவு, மதுவிலக்குஅமலாக்கத்துறை மற்றும் க்யூ பிரிவு ஆகிய அலுவலகங்களும் அமைக்கப்படவுள்ளன.

ரூ.50 கோடிக்கு அதிக மதிப்பிலான மற்றும் 1,000 பேருக்கு மேல் வேலை செய்யும் கட்டடங்களைக் கட்டும்போதுமத்திய சுற்றுச்சூழல் அலுவலகத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும் என சமீபத்தில் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுஉத்தரவு பிறப்பித்தார்.

இந்த புதிய டிஜிபி அலுவலகம் ரூ. 30 கோடி செலவில் கட்டப்படுவதால் மத்திய சுற்றுச்சூழல் அலுவலகத்தின்அனுமதி பெறத் தேவையில்லை. அதே நேரத்தில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தைத் தாண்டாதவகையில் தமிழக அரசு பார்த்துக் கொள்ளும் என்று தெரிகிறது.

முதலில், தற்போதைய டிஜிபி அலுவலகக் கட்டடத்தை இடித்து விட்டு அங்கு நவீன டிஜிபி அலுவலகம் கட்டஜெயலலிதா அரசு தீர்மானித்திருந்தது.

ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான, பாரம்பரியம் மிக்க இந்தக் கட்டடத்தைஇடிக்கக் கூடாது என்று கூறி இந்திய தேசிய தொல்பொருள் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு அறக்கட்டளைஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையுத்தரவு பெற்றது. இதனால் புதிதாகக் கட்டிவிட முடிவுசெய்யப்பட்டுள்ளது.

கமிஷன் அடிக்கவே புதிய கட்டடம்: கருணாநிதி

இந் நிலையில் அரசின் இந்த முடிவு குறித்து கருத்து கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, புதிய தலைமைச்செயலகம், புதிய டிஜிபி அலுவலகம் இதைக் கட்டுவதில் டெண்டர், கமிஷன் ஆகியவை இருக்கிறதல்லவா?அதற்காகத் தான் புதிய அலுவலகங்கள் கட்டுவதாகக் கூறப்படுகிறது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X