For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினியின் ஆதரவு கோருகிறது காங்கிரஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நடிகர் ரஜினிகாந்தை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் வாசன் நேரில் சந்தித்துப் பேசினார். காங்கிரஸ்தலைமையில் தனி அணி அமைக்க ஆதரவு தருமாறு ரஜினியிடம் வாசன் கோரியதாகத் தெரிகிறது.

இன்று டெல்லி செல்லும் வாசன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக சோனியா காந்தியுடன் பேச்சுநடத்த உள்ளார். வட மாநில தேர்தல்களில் பா.ஜ.க. அடைந்துள்ள பெரும் வெற்றியால் பா.ஜ.க.- திமுக கூட்டணிஉடைவதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்துவிட்ட நிலையில் அதிமுகவுடனும் கூட்டணி சேர இயலாத சிக்கலில்காங்கிரஸ் மாட்டியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியாவை முதல்வர் ஜெயலலிதா மிகக் கடுமையாக விமர்சித்து வருவதால் அதிமுகதனித்தும், திமுக-பா.ஜ.க. ஒரு அணியாகவும் களமிறங்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது. தனித்து விடப்படும்நிலைக்குத் தள்ளப்பட்டு காங்கிரஸை பயம் ஆட்ட ஆரம்பித்துள்ளதால், ரஜினியின் ஆதரவை அந்தக் கட்சிகோருவதாகத் தெரிகிறது.

சோனியாவின் ஆசியுடன் தான் ரஜினியை வாசன் சந்தித்தாகவும் கூறப்படுகிறது. அப்போது பா.சிதம்பரத்தைகாங்கிரஸ் மீண்டும் முன் நிறுத்த வேண்டும் என ரஜினி கோரியதாகத் தெரிகிறது. இதை ஏற்க வாசனும் முன்வந்துள்ளதாகவும் தெரிகிறது.

சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கும் வாசனும் மிக நெருக்கமான நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவழியிலும் காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் இன்று சத்தியமூர்த்தி பவனில் சோனியா காந்தியின் பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு டெல்லிபுறப்பட்ட வாசன் நிருபர்களிடம் பேசுகையில், மத்தியில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள திமுகவுடன் காங்கிரஸ்கூட்டணி கிடையாது. அதிமுக எந்தக் கட்சியுடனும் சேராமல் தனித்து நிற்கிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சோனியா காந்தி சொற்படி தமிழக காங்கிரஸ் கட்சி கூட்டணி முயற்சியில்ஈடுபடும். இப்போது தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்துவதில்தான் என் முழு கவனமும் உள்ளது.

சோனியா காந்தியின் பிறந்த நாளை இளங்கோவன் தனது ஆதரவாளர்களுடன் தனியே கொண்டாடியதில் தவறுஇல்லை. என்னுடைய விருப்பம் என்னவென்றால் ஒவ்வொருவரும் இந்த பிறந்த நாளைக் கொண்டாடவேண்டும்என்பது தான் என்றார்.

நாளை முதல் நாடாளுமன்ற ராஜ்யசபா கூட்டத்தில் பங்கேற்கிறார். கலைக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குபுதிய நிர்வாகிகள் அடங்கிய பட்டியலை சோனியாவிடம் அளிக்க உள்ளார்.

அப்போது தமிழக அரசியல் விவகாரங்கள், ரஜினியின் ஆதரவைப் பெறுவது, சிதம்பரத்தை மீண்டும் உள்ளேஇழுப்பது ஆகியவை குறித்து பேசப்படலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X