திமுக வெளியேற நாங்கள் காரணமல்ல: இல.கணேசன்
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலக தமிழக பாரதீய ஜனதாக் கட்சி காரணமல்ல, அவர்களாகவேவெளியேறியுள்ளனர் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் அகில இந்திய செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
பி.பி.சி. தமிழ் சேவைக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த நான்கு ஆண்டு கால தமிழக பா.ஜ.க.கூட்டணியிலிருந்து விலக நாங்கள்தான் காரணம் என்று திமுக கூறுவதை ஏற்க முடியாது. கூட்டணி தர்மத்தைநாங்கள் என்றைக்குமே மீறியதில்லை. தமிழகத்தில் முக்கியக் கட்சியான திமுகவுடன் கூட்டணி நீடிப்பதையேநாங்கள் எப்போதும் விரும்பினோம்.
திமுகவின் மறியல் போராட்டம் குறித்து பா.ஜ.க. தலைவர்கள் சில கருத்துக்களைக் கூறியது உண்மைதான். ஆனால்அதை திமுக ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். மறியல் குறித்துக் கூறியிருந்தாலும் கூடதிமுகவுடன் கூட்டணி நீடிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்பினோம். ஆனால் அதை திமுக நினைத்துப்பார்க்கவில்லை.
கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். விலகியும் விட்டார்கள்.அதற்காக இல்லாத காரணத்தையெல்லாம் தற்போது கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
எப்போதுமே நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கருதி செயல்பட்டதில்லை. அதிமுகவுடன்கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிற தமிழக கட்சிகளுக்கு இப்போது நான் விடுக்கும் ஒரேவேண்டுகோள் இதுதான்: பிரதமர் வாஜ்பாய் நல்லாட்சி ஒன்றையே குறிக்கோளாக கருதி செயல்பட்டு வருகிறார்.அவருக்கு ஆதரவான நிலையையே எடுங்கள் என்று அக் கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
இந் நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய துணைப் பிரதமர் அத்வானி, கூட்டணியிலிருந்து திமுகவிலகியது அவர்களது சொந்த முடிவு. இது குறித்து பாதுகாப்பு அமைச்சரும், தேசிய ஜனநாயகக் கூட்டணிஅமைப்பாளருமான ஜார்ஜ் பெர்ணான்டஸூடன் பேசினேன். திமுகவின் இந்த முடிவால் கூட்டணிக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது என்று கூறினார்.
எதிர்க்கட்சிகள் வரவேற்பு:
அதிமுக அரசை ஆதரிக்கும் பா.ஜ.க. அரசை எதிர்த்து திமுக எடுத்துள்ள முடிவாகவே இதைக் கருத முடியும் என்றுகாங்கிரஸ் ஜனநாயகப் பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதவிர இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகளின்தலைவர்களும் திமுகவின் டிவை வரவேற்றுள்ளனர்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications