ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்: சோகத்தில் தாய்!
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு பிரசவத்தின்போது 3 பெண்குழந்தைகள் பிறந்தன.
நாகர்கோவில் அருகே உள்ள இறைச்சக்குளம் என்ற பகுதியில் உள்ள விஷ்ணுபுரம் காலனியில் வசித்து வருபவர்பால்ராஜ். இவரது மனைவி சொர்ணமணி.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த சொர்ணமணிக்கு 24ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்துகோட்டாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார் சொர்ணமணி.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உடனேயே டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை செய்து 3 குழந்தைகளையும்வெளியே எடுத்தனர். 3 குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வாஜ்பாய் பிறந்த நாளன்று 3 பெண் குழந்தைகளும் பிறந்ததால், அப் பகுதி பா.ஜ.க. தொண்டர்கள்சொர்ணமணிக்கு இனிப்பு வழங்கி வாழ்த்தினர். ஆனால் அவர்களது வாழ்த்துக்களை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் சொர்ணமணி இருந்தார்.
ஏற்கனவே 2 பெண் குழந்தைகளுடன், வறுமையில் வாடி வரும் நான், தற்போது 5 பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறேனோ தெரியவில்லை என்று கண்ணீருடன் கூறினார். சொர்ணமணியின் கணவர்பால்ராஜ், சாதாரண கூலித் தொழிலாளி ஆவார்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications