For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி மீது கடும் அதிருப்தியில் ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து திமுக, மதிமுக வெளியேறிவிட்டாலும் தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணிமாறு கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, இன்னும் தனது முடிவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

திமுக கூட்டணியில் பா.ம.க. இடம் பெறும் என்று கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் இது குறித்து அக் கட்சிஇன்னும் வாயே திறக்கவில்லை.

தமிழக அரசியல் வரலாற்றில் வித்தியாசமான கட்சியாக திகழ்ந்து வருகிறது பா.ம.க. வட மாவட்டங்களில் அசைக்கமுடியாத ஜாதி பலம் கொண்ட சக்தியாக விளங்கி வரும் அக் கட்சி யாருடன் கூட்டணி சேரும் என்பதை யாராலும்உறுதியாக கூற முடியாது.

தேர்தலுக்குத் தேர்தல் வண்ணம் மாறும் திறமை கொண்ட டாக்டர் ராமதாஸ், கடைசி நேரம் வரை ஒரு கூட்டணியில்இருப்பதும், திடீரென்று அணி மாறி அத்தனை பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவது வழக்கம்.

இந் நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகாது என்று அக் கட்சியின் உயர் மட்டக் குழுக்கூட்டத்தில் ராமதாஸ் கூறி விட்டார். ஆனால், கருணாநிதியோ, ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வருவார், ஆனால்எப்போது வருவார் என்று தெரியாது என்று கூறியுள்ளார்.

பாஜக அணியை விட்டு ராமதாஸ் வருவதாக உறுதி ஏதும் தரவில்லை என்றும் அவருக்கு நெருக்குதல்கொடுக்கவே கருணாநிதி இப்படிப் பேசியுள்ளதாகவும் பா.ம.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் கருணாநிதி மீது ராமதாஸ் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தெரிகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை பாமக கூட்டணி குறித்து முடிவு செய்யாது. முதலில் தேதியை அறிவிக்கட்டும்,அதன் பிறகே கூட்டணி குறித்து பேசுவோம் என்றும் அந்த பாமக இரண்டாம் மட்டத் தலைவர்கள் கூறுகிறார்கள்.

முடிந்தவரை பா.ஜ.க. கூட்டணியில் நீடிக்கவே ராமதாஸ் விரும்புவதாகவும் தெரிகிறது. கருணாநிதியுடன் ராமதாஸ்நெருக்கமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும், உள்ளூர திமுக மீது கடும் கோபத்தில் இருப்பதாகசொல்கிறார்கள்.

தனக்கு எதிராக வாழப்பாடி ராமமூர்த்தியை கொம்பு சீவி விட்ட கருணாநிதியை ராமதாஸ் மறக்கவே மாட்டார்என்கின்றனர் பாமக தலைவர்கள். மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதயத்தில் இடம் இருக்கிறது,கூட்டணியில் இல்லை என்று சொல்லி தனக்கும் வாழப்பாடிக்கும் சேர்த்து வெறும் 7 இடங்களை மட்டுமேகருணாநிதி கொடுத்ததையும் ராமதாஸ் மறக்கவில்லை.

இதில் இரண்டை வாழப்பாடி கேட்க, ராமதாஸ் மறுக்க கடும் மோதல் நடந்தது. இதனால் பா.ம.கவுக்கு எதிராகபிரச்சாரம் செய்து வன்னியர் ஓட்டுக்களை பிரித்தார் வாழப்பாடி. இதை கருணாநிதி திட்டமிட்டு செய்ததாகவேராமதாஸ் இன்றளவும் கருதுகிறார்.

எனவே கருணாநிதியை நம்புவதை விட எங்களுக்கு எல்லா விதத்திலும் உதவி வரும் பா.ஜ.கவுடன் கூட்டணிவைப்பதையே ராமதாஸ் அதிகம் விரும்புகிறார் என்கிறார்கள் பா.ம.கவினர்.

முதன் முதலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 5 எம்.எல்.ஏக்களைப் பெற்றது பாமக. வெற்றிக்குப் பிறகுதிமுகவுடன் கூட்டணி வைத்தது. இதையடுத்து ராமதாஸ் நடத்திய போராட்டத்தை போலீஸை வைத்து அடக்கினார்முதல்வர் ஜெயலலிதா. அப்போது ராமதாஸ் ஓட, ஓட விரட்டப்பட்டு லத்தியால் விளாசப்பட்டார்.

இதையடுத்து தனது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தின்போது ராமதாஸ் குடும்பத்துக்கு ஜெயலலிதாவழங்கிய பட்டுச் சேலையை தீ வைத்து எரித்தார் ராமதாசின் மனைவி. இனி எப்போதும் ஜெயலலிதாவுடன்ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று வசனத்தை பிய்த்து வாங்கினார் ராமதாஸ்.

இதன் பின்னர் மதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் கிடைத்த படுதோல்விக்குப் பிறகுமீண்டும் ஜெயலலிதாவை அன்புச் சகோதரி என்று சொல்லிக் கொண்டு போயஸ் தோட்டத்தின் படியேறினார்.

அதிமுகவுடன் இணைந்து கடந்த சட்டசபை தேர்தலை சந்தித்தது பாமக. இதில் பாமகவுக்கு 20 எம்.எல்.ஏக்கள்கிடைத்தனர். ஆனால் தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதாவை சந்திக்க கோட்டைக்குப் போன ராமதாஸைவெளியிலேயே இரண்டு மணி நேரம் நிற்க வைத்து கேவலப்படுத்தினார் ஜெயலலிதா.

இதையடுத்து ஜெ. ஆட்சி அமைத்த 20 வது நாளிலேயே கூட்டணியை விட்டு வெளியேறி திமுகவுடன் இணைந்ததுபாமக.

இப்படி நேரத்துக்கு நேரம் கலர் மாறும் ராமதாஸ் தற்போது வட மாநிலங்களில் பா.ஜ.க. அடைந்துள்ள சட்டசபைத்தேர்தல் வெற்றிகளைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளதாகவும், எப்படியும் அடுத்தும் அக் கட்சியே ஆட்சிக்கு வரும்என்று நம்புவதாகவும் சொல்கிறார்கள்.

செல்வாக்கு மிகுந்த பா.ஜ.கவை விட்டு இப்போது வெளியே போக வேண்டாம் என்று கருதும் அவர், வரும்நாடாளுமன்றத் தேர்தலில் காஙகிரஸ்- திமுக கூட்டணியை முறியடிக்க தன்னை அதிமுகவும் நிச்சயம் நாடும் என்றுநினைக்கிறார்.

அப்போது குறைந்தபட்சம் 10 எம்.பி. சீட்களையாவது கேட்டு நெருக்குவது அவரது திட்டம் என்கிறார்கள். தரமறுத்தால் இருக்கவே இருக்கிறது, திமுக கூட்டணி என்று ராமதாஸ் கருதுவதாகவும் தெரிகிறது.

கேட்டதைத் தராவிட்டால், வட மாவட்டங்களில் ஓட்டுக்களைப் பிரித்து அதிமுகவுக்கு உதவி விடுவார் என்ற பயம்இருப்பதால் கடந்த முறை போலவே இந்த முறையும் குறைந்தபட்சம் 7 இடங்களை திமுக நிச்சயம் தனக்குத்தந்துவிடும் என்று ராமதாஸ் கருதுகிறார்.

கேட்ட இடங்கள் அதிமுக-பா.ஜ.க கூட்டணியிலேயே கிடைத்துவிட்டால் ரொம்பவே வசதி என்பது பா.ம.கவின்எண்ணம். காரணம், ஆட்சியில் உள்ள பா.ஜ.க., அதிமுகவுடன் இருந்தால் தேர்தல் செலவுகளை சமாளிக்க வசதியாகஇருக்கும் என்று நினைக்கிறது பா.ம.க என்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X