For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓட்டு பட்ஜெட்: மத்திய அரசு திடீர் வரிச் சலுகை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மக்களவைத் தேர்தலுக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதையொட்டி, தனது வாக்கு வங்கியான மத்திய தரவகுப்பினரைக் கவரும் வகையில், பல புதிய வரிச்சலுகைகளுடன் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மினி-பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது.

பாராளுமன்றத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கலைத்துவிட்டு, மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்தமத்திய அரசு தீர்மானித்துள்ளது. அவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் மார்ச்சில் புதிய பட்ஜெட்தாக்கல் செய்ய முடியாது. இந்த ஆண்டிற்கான வரவு-செலவுக்கு ஒரு மசோதாவை மட்டுமே நாடாளுமன்றத்தில்தாக்கல் செய்ய முடியும். அதில் வரிச் சலுகைகளை அறிவிக்க முடியாது.

இதனால், பெரும் வரிச் சலுகைகளுடன் ஒரு மின் பட்ஜெட்டையே அரசு அறிவித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

* ஆண்டு வருமானம் ரூ. 1.5 லட்சம் வரை உள்ளவர்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவேண்டியதில்லை. வருவாய்ச் சான்றிதழே போதுமானது.

* சொந்த வீடு, டெலிபோன் உள்ளிட்ட ஆறு அம்சங்களில் ஏதாவது ஒன்று இருந்தால், வருமானம் தொடர்பானகணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை பென்ஷன்தாரர்களுக்கு பொருந்தாது. இன்டர்நெட்மூலம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம்.

* இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான சுங்கத் வரி 25% லிருந்து 20% ஆகக் குறைக்கப்படுகிறது.

* செல்போன்கள் மீதான வரி பாதியாகக் குறைக்கப்படுகிறது.

* உள்நாட்டு விமானப் போக்குவரத்து வரி 15% ரத்தாகிறது. விமானப் பயணிகள் லக்கேஜ் தொடர்பான விதிகள்தளர்த்தப்படுகின்றன. விமானப் பயணிகள் கொண்டு வரும் லேப்-டாப் கணிப்பொறிகளுக்கு வரி விலக்குஅளிக்கப்படுகிறது.

*கணிப்பொறி மீதான எக்சைஸ் வரி 8% ஆகக் குறைகிறது.

* நிலக்கரி மீதான சுங்க வரி 10% முதல் 15% வரை குறைகிறது. இதனால் மின் உற்பத்தி செலவு குறைந்து,கட்டணமும் குறையும்.

* மின் உற்பத்தி சாதனங்களுக்கு சுங்க வரி 15% முதல் 10% வரை குறைகிறது. இதனால் மின் கட்டணம் மேலும்குறையும்.

* உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவக் கருவிகள் மீதான வரியில் 5% குறைக்கப்படுகிறது.

இவ்வாறு பல முக்கிய வரிச் சலுகைகள் இன்று முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X