திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்: கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில்திமுக கூட்டணிக்கு 42% வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 22.4% வாக்குகளும் கிடைக்கும் என்றுதெரியவந்துள்ளது.

தொகுதி வாரியாக திமுக 25 தொகுதிகளிலும், அதிமுக 8 தொகுதிகளிலும் 5 சதவீத வாக்கு வித்தியாசத்தில்முன்னணியில் திகழ்கின்றன. மேலும் 7 தொகுதிகளில் 5 சதவீதத்திற்கும குறைவான வாக்கு சதவீதத்தில் திமுகமுன்னணியில் உள்ளது.

சென்னை லயோலா கல்லூரியின் பண்பாடு- மக்கள் தொடர்பகமும், காட்சி தகவலியல் துறையும் இணைந்து இந்தகருத்துக் கணிப்பை நடத்தின. பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் கடந்த மாதம் 17ம் தேதியிலிருந்து 30ம்தேதி இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

தொகுதிகளின் பெயர் தாங்கிய நகரங்களிலும், தொகுதிக்கு 2 கிராமங்கள் வீதமும் மொத்தம் 4,500 பேரிடம் இந்தக்கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. தொகுதிக்கு 120 பேர் வரை இதில் கருத்துத் தெரிவித்தனர்.

கருத்துத் தெரிவித்தோரில் 60.9 சதவீதம் பேர் எந்தக்கட்சியையும் சேராதவர்கள். அதிமுகவைச் சேர்ந்தவர்கள் 14சதவீதமும், திமுகவினர் 13.9 சதவீதமும், காங்கிரஸார் 3.9 சதவீதமும், கம்யூனிஸ்ட்கள் 1 சதவீதமும், பா.ம.க. 1.2சதவீதமும், பா.ஜ.க. 1.2 சதவீதமும், மதிமுக 1.2 சதவீதமும், பிற கட்சியினர் 2.7 சதவீதமும் கருத்துத் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு எவ்வாறு உள்ளது என்ற கருத்துகேட்கப்பட்டது.

  • அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக 54.2 சதவீதம் பேரும், எதிராக 45.8 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
  • மழைநீர் சேகரிப்புத் திட்டத்திற்கு ஆதரவாக 75.6 சதவீதம் பேரும், எதிராக 24.6 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.
  • யானைகளுக்கான சிறப்பு முகாவை ஆதரித்தோர் 41.7 சதவீதம் பேர். எதிர்ப்பு தெரிவித்தவர்கள் 58.3 சதவீதம் பேர்.
  • மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு ஆதரவாக 43.8 சதவீதம் பேரும், எதிராக 56.2 சதவீதம் பேரும் கருத்துக் கூறியுள்ளனர்.
  • கோவில்களில் பலியிடுவதைத் தடை செய்யும் சட்டத்தை ஆதரித்தோர் 39.9 சதவீதம் பேர், அதை எதிர்த்தோர் 60.1 சதவீதம் பேர்.
  • பசுவதை தடைச் சட்டத்தை ஆதரித்தோர் 48.9 சதவீதம் பேர். எதிர்த்தவர் 51.1 சதவீதம் பேர்
  • கெளரவ ரேஷன் கார்டு திட்டத்தை ஆதரித்தோர் 44.3 சதவீதம் பேர். எதிர்த்தவர்கள் 55.7 சதவீதம் பேர்.
  • அரசு மதுபானக் கடைகளுக்கு ஆதரவு தெரிவித்தோர் 61.3 சதவீதம் பேர். எதிர்ப்பு தெரிவித்தவர்கள் 38.7 சதவீதம் பேர்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு 37.6 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு 27.1 சதவீதம் பேரும், பா.ஜ.கவுக்கு 6.3சதவீதம் பேரும், காங்கிரஸ் கட்சிக்கு 8.4 சதவீதம் பேரும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1.3 சதவீதம் பேரும், பா.ம.கவுக்கு1.6 சதவீதம் பேரும், மதிமுகவுக்கு 1.5 சதவீதம் பேரும், இதர கட்சிகளுக்கு 4.4 சதவீதம் பேரும், கூட்டணியைப்பொறுத்து 11.6 சதவீதம் பேரும் வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆண்கள், பெண்கள் ஆகிய இரு தரப்பினரிடமும் திமுக முதலிடத்தைப் பெற்றுள்ளது. திமுகவுக்கு 37.6 சதவீதம்ஆண்களும், 37.1 சதவீத பெண்களும் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதிமுகவுக்கு 27.1 சதவீதஆண்களும், 27.1 சதவீத பெண்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு 8.2 சதவீதம் ஆண்களும், 10.4 சதவீதம் பெண்களும், பா.ஜ.கவுக்கு 6.8 சதவீத ஆண்களும், 4.4சதவீத பெண்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

படிப்பறிவற்றவர்களிடம் அதிமுக, திமுகவை விட 17.8 சதவீதம் அதிக செல்வாக்குப் பெற்றுள்ளது. அரசுஊழியர்களிடம் திமுகவுக்கு 35.8 சதவீதமும், அதிமுகவுக்கு 16.4 சதவீதமும், காங்கிரஸுக்கு 16.4 சதவீதமும்,பா.ஜ.கவுக்கு 10.4 சதவீதமும் செல்வாக்கு உள்ளது.

மதரீதியாக பார்க்கும்போது இந்து, முஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய மூன்று மதத்தவரிடமும் திமுகவுக்கு அதிகசெல்வாக்கு உள்ளது. சாதிரீதியாகப் பார்க்கும்போது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரிடையே திமுகவும், மற்ற சாதியினரிடையே அதிமுகவும் அதிக செல்வாக்குபெற்றுள்ளன.

நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவதை ஆதரிப்போர் 57.8 சதவீதம் பேர், எதிர்ப்போர் 40.4 சதவீதம் பேர். நடிகர்கள்பிராச்சாரம் செய்வதால் எந்த பாதிப்பும் இல்லை என்று 46.7 சதவீதம் கூறியுள்ளனர். தான் சார்ந்திருக்கும் கட்சியின்சார்பில் தனது அபிமான நடிகர் தேர்தலில் நின்றால் 62.9 சதவீதம் பேர் ஆதரிப்பதாகவும், எதிரணியில் நின்றால்27.1 சதவீதம் பேர் ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள் தனிக்கட்சி தொடங்கினால் ஆதரிக்கப் போவதில்லை என்று 51.2 சதவீதம் பேரும், ரஜினி ஆரம்பித்தால்ஆதரிப்பதாக 29.6 சதவீதம் பேரும், விஜயகாந்துக்கு ஆதரவாக 16.7 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள எம்.பியே வரும் தேர்தலிலும் போட்டியிட்டால் அவருக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று 56.7சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

தொகுதி வாரியாகப் பார்க்கும்போது, திமுக 25 தொகுதிகளிலும், அதிமுக 8 தொகுதிகளிலும் 5 சதவீத வாக்குவித்தியாசத்தில் செல்வாக்குடன் திகழ்கின்றன. மேலும் 7 தொகுதிகளில் 5 சதவீதத்திற்கும குறைவான வாக்குசதவீதத்தில் திமுக முன்னணியில் உள்ளது.

திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு 42 சதவீத மக்களின் ஆதரவும், அதிமுக- பா.ஜ.கவுடன் கூட்டணிக்கு 22.4 சதவீதம்மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+