திமுக- முஸ்லீம் லீக் உறவும், தங்கத் தாம்பாளமும்!
சென்னை:
நதிமுகவுக்கும், முஸ்லீம் லீக் கட்சிக்கும் சிறிது காலமாக நிலவி வந்த உறவுப் பிரிவு, தங்கத் தாம்பாளத்தில் ஏற்பட்டகீறல் போன்றது. கீறல் ஏற்பட்ட தங்கத் தாம்பாளத்தை உருக்கி, சரி செய்து புதிய தாம்பாளம் செய்தாகி விட்டதுஎன்று திமுக தலைவர் கருணாநிதி வர்ணித்துள்ளார்.
சென்னையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் கருணாநிதி சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், அண்ணா, காயிதே மில்லத் காலத்திலிருந்தேதிமுகவுக்கும், உங்களுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது. நாம் இருவரும் நெருங்கிய உறவினர்கள்போல.
இடையில் சில காலம் உறவு இல்லை.அதற்காக நாம் இருவருக்கும் பகை என்று கூற முடியாது. மண்பானைஉடைந்தால் அதை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் தங்கத் தாம்பாளத்தில் கீறல் விழுந்தால், தாம்பாளத்தைநொறுக்கி, உருக்கி புதிய தாம்பாளம் செய்து விடலாம். அதுபோலத்தான் திமுகவுக்கும், உங்களுக்கும் இடையேஉள்ள உறவு.
கீறல் அகற்றப்பட்ட, புத்தம் புது தங்கத் தாம்பாளம் போல, நாம் காட்சி அளிக்கிறோம். நம்மிடையேஏற்பட்டிருப்பது புதிய உறவு அல்ல, மாறாக மறுமலர்ச்சி. இது தொடர்ந்து நறுமணம் வீசிக் கொண்டிருக்கும்என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications