நாட்டின் முதல் பெண் போலீஸ் பட்டாலியன்: தமிழகம் சாதனை
சென்னை:
இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து மகளிர் போலீஸ் படையை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் தொடங்கிவைத்தார்.
அதிரடிப்படை, கமாண்டோ படை, விரைவு அதிரடிப்படை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த முதலாவது பெண் போலீஸ்பட்டாலியனின் துவக்கி விழா எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது.
ஆண் வீரர்களுக்கு இணையாக இந்த வீராங்கனைகளுக்கு முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் போலீஸ்படையை தொடங்கி வைத்து ஜெயலலிதா பேசுகையில், தமிழக காவல்துறை வரலாற்றில் இந்த நாள் ஒரு வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த நாள்.
நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்றும் எனது கனவின் ஒரு பகுதிதான் இந்த மகளிர் படை. தமிழகத்தில்காவல்துறையை நவீனமாகவும், சிறப்பாகவும் மாற்றும் பொருட்டு கடந்த ஆண்டு ரூ. 134.61 கோடி செலவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மொத்தம் 1,600 பெண் காவலர்கள் காவல்துறையில் சேர்க்கப்பட்டனர். விரைவில் மேலும் 2,300 பெண்போலீஸார் மற்றும் 961 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படுவார்கள்.
எனது கடந்த ஆட்சிக் காலத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அறிமுகப்படுதப்பட்டு நாடு முழுவதும்பிரபலமடைந்தது. இப்போது தமிழகத்தில் மொத்தம் 148 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன என்றார் ஜெயலலிதா.
முன்னதாக பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார். அவருக்கு 21 துப்பாக்கிக்குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications