கொழும்பு விமான நிலையத்தில் ரஷ்ய விமானம் விபத்து: சென்னை திருப்பிவிடப்பட்ட விமானங்கள்
கொழும்பு:
கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் நேற்றிரவு ரஷ்ய விமானம்விபத்துக்குள்ளானதால் அந்த விமான நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து கொழும்பு வந்த விமானங்கள்அனைத்தும் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன.
சுமார் 10 மணி நேரத்துக்குப் பின் இன்று காலை தான் கொழும்பு விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.
நேற்றிரவு துபாயில் இருந்து வந்த ரஷ்யாவுக்குச் சொந்தமான ஐ.எல்.-18 ரக மிகப் பெரிய சரக்கு விமானம்பண்டாரநாயகா விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஆனால், முன் சக்கரம் வெளியே வராததால் அந்தவிமானம் ஓடுபாதையில் பெரும் சத்தத்துடன் மோதி தரையிறங்கியது.
ஓடுபாதையின் பாதி தூரம் வரை அந்த விமானம் தரையில் தேய்த்தவாரே ஓடியது. இதில் விமானத்தின் இடதுபுறஎன்ஜின் பெரும் சேதமடைந்தது. பலத்த சேதத்துடன் ஒரு வழியாய் அந்த விமானம் ஓடுதளத்தை அடைத்துக்கொண்டு நின்றது. அந்த விமானத்தை உடனடியாக ஓடுபாதையில் இருந்து அகற்ற முடியவில்லை.
மேலும் பாதையும் சேதத்துக்குள்ளாகி, ரன் வே விளக்குகளும் சேதம் அடைந்ததால் விமானங்கள் தரையிறங்கவோ,கிளம்பிச் செல்லவோ முடியவில்லை. இதையடுத்து அந்த விமான நிலையம் மூடப்பட்டது.
இதனால் சிங்கப்பூர்- கொழும்பு, டெல்லி-கொழும்பு விமானங்கள் உள்பட இலங்கை வந்த பல சர்வதேசவிமானங்களும் சென்னைக்குத் திருப்பி விடப்பட்டன. இன்று காலை 8 மணிக்குத் தான் ரஷ்ய விமானம்ஓடுபாதையில் இருந்து அகற்றப்பட்டு, ஓடுபாதையும் செப்பனிடப்பட்டது.
இதையடுத்து விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. திறக்கப்பட்டவுடன் சூரிச்சில் இருந்து வந்த இலங்கைவிமானம் காலை 8.18 மணிக்கு தரையிறங்கியது. சென்னைக்குத் திருப்பிவிடப்பட்ட விமானங்களும் மீண்டும்கொழும்பு கிளம்பவுள்ளன.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications