அதிமுகவில் நடிகர் கார்த்திக்: தேர்தலில் போட்டி?
சென்னை:
பிரபல விக் நடிகர் கார்த்திக் இன்று அதிமுகவில் சேர்ந்தார். இதையடுத்து அவர் வரும் மக்களவைத் தேர்தலில்போட்டியிடுவார் என்று தெரிகிறது.
தேவர் சமூகத்தைச் சேர்ந்தவரான கார்த்திக் பிரபல நடிகர் முத்துராமனின் மகன். இவருக்கு மதுரை, ராமநாதபுரம்போன்ற பகுதிகளில் தேவர் சமூக இளைஞர்கள் ரசிகர் மன்றம் நடத்தி வருகின்றனர்.
சசிகலா குடும்பத்தினருடனும் கார்த்திக்கு இனரீதியில் நட்புறவு இருந்து வருகிறது. அவரை கட்சியில் சேர்க்க சிலமாதங்களாகவே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந் நிலையில் எம்.எல்.ஏவும் நடிகருமான ராதாரவியுடன் அவர்இன்று காலை அதிமுக தலைமையகம் வந்தார்.
அதிமுகவில் இணைய விரும்புவதாக அதிமுக அமைப்புச் செயலாளர் செங்கோட்டையனிடம் கடிதம் தந்தார். இதைஏற்று உடனடியாக அவர் அதிமுகவில் சேர்க்கப்பட்டார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு அவரைப் பயன்படுத்திக் கொள்ள அதிமுக திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் சசிகலாதரப்பினருடன் அவருக்கு செல்வாக்கு உண்டு என்பதால் தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தரப்படலாம் என்றுதெரிகிறது.
அவரை வரும் தேர்தலில் தென் சென்னையில் திமுகவின் டி.ஆர்.பாலுவுக்கு எதிராக அதிமுக களமிறக்கி விடும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில காலமாகவே போதைக்கு அடிமையாகிவிட்ட கார்த்திக் இதனால் படப் பிடிப்புகளுக்கு சரியாக வராமல்இருந்து ஒட்டுமொத்தமாக மார்க்கெட் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதிலிருந்து மீண்டுவிட்டதாகசமீபத்தில் அவர் பேட்டி கொடுத்திருந்தார்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications