For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"கட்சி தாவி" அருணா- துரைமுருகன் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கட்சி தாவுவதையே தனது கொள்கையாகக் கொண்டுள்ள ஆலடி அருணா, திமுக தலைவர் கருணாநிதியைசர்வாதிகாரி என்று கூறுவதா என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஆலடி அருணா, கருணாநிதியை சர்வாதிகாரி என்று விமர்சித்திருந்தார்.இதற்கு துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியை, ஆளுநரின் கருத்தைக் கேட்காமலேயேதன்னிச்சையாக டிஸ்மிஸ் செய்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனை அழைத்து தனது நூலைவெளியிடச் செய்தார் ஆலடி அருணா. அப்போதே அவரை கட்சியிலிருந்து நீக்கியிருந்தால் இப்படிப் பேசியிருக்கமாட்டார் ஆலடி அருணா.

கட்சியின் கொள்கைகளுக்கு மதிப்பு கொடுப்பதை விட தனது சுய லாபத்தை மட்டுமே கணக்கில் பார்ப்பவர் ஆலடிஅருணா. அவர் கருணாநிதியை விமர்சிப்பதற்கு எந்தவித தகுதியும் கிடையாது.

1974ம் ஆண்டு திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத காரணத்தால் அதிமுகவில் போய் சேர்ந்தார்.பின்னர் எம்.பி. தேர்தலில் சீட் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார்.

இப்போதும், சீட் கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக திமுகவிலிருந்து கொண்டே பா.ஜ.க. தலைவர்களைப்போய் பார்த்தார், அதன் காரணமாகவே அவரை கட்சியிலிருந்து திமுக நீக்கியுள்ளது என்று கூறியுள்ளார்துரைமுருகன்.

ஆற்காடு வீராசாமி கண்டனம்:

ஆலடி அருணாவின் பேச்சுக்கு திமுக பொருளாளர் ஆற்காடு வீராச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுகவில் அமைச்சராக ஆலடி அருணா இருந்தபோது, ஒரு புத்தகத்தை எழுதி அதை கருணாநிதி வெளியிடவேண்டும் என்று விரும்பினார். கருணாநிதியும் அதற்கு அணிந்துரை எழுதிக் கொடுத்தார். அதன் பிறகு அந்தப்புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தைச் சேர்த்தார். அதை நீக்குமாறு கருணாநிதி கோரினார்.

அதற்கு ஆலடி அருணா, ஒரு புத்தகத்தில் என்ன இடம் பெற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அதன்ஆசிரியருக்கே உண்டு. அதில் தலையிட வேறு யாருக்கும் உரிமை இல்லை என்று தனது உதவியாளர் மூலம்கருணாநிதிக்கு கடிதம் அனுப்பி வைத்தார். அதன்பிறகும் அவர் அமைச்சராக நீடித்தார்.

இதேபோல் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் நடந்திருந்தால் அந்த அமைச்சரை பதவி நீக்கம் செய்திருப்பார்.அவ்வாறு செய்யாத கருணாநிதி சர்வாதிகாரியாகத் தெரிகிறாரா? ஒருவருக்கு பதவி ஆசை இருக்கலாம். ஆனால்பதவி வெறி இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

எனக்கு பதவி ஆசை உண்டு: அருணா

எனக்கு பதவி ஆசை இல்லை என்று சொல்லவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கூறியுள்ளார்.

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஆலடி அருணா செய்தியாளர்களிடம் பேசுகையில், என் மனதில் பட்டதைவெளிப்படையாக திமுக தலைவர் கருணாநிதியிடம் கூறுவேன். அதனாலேயே கடந்த இரண்டு ஆண்டுகளாககட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்டேன்.

நான் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவன். ஆனால் கருணாநிதியும், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும்தேவைப்பட்டால் காங்கிரஸூடன் கூட்டணி வைப்பார்கள். இல்லையென்றால் எதிர்ப்பார்கள்.

எனக்கு பதவி ஆசை இல்லை என்று சொல்லவில்லை. நான் என்ன நாடாளுமன்றத்துக்குச் செல்லதகுதியில்லாதவனா? கட்சிக்கு உழைக்காதவனா? நெல்லையில் நடந்த பவள விழா மாநாட்டில் கட்சிக்காக ரூ.85லட்சம் நிதி திரட்டித் தரவில்லையா? கட்சிக்காக சிறை செல்லவில்லையா?

என்னைப் போன்று கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் தராமல், கட்சிக்கே தொடர்பு இல்லாதவர்களைவேட்பாளராக தேர்வு செய்ய கருணாநிதிக்கு எப்படி மனம் வந்தது?

வேட்பாளராக போட்டியிட விரும்புவர்கள் ரூ.60 லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று கட்சி கேட்டுக்கொண்டதால், பல இடங்களில் கடன் வாங்கி பணத்தைக் கட்டினேன். என்னைத் தேர்வு செய்யாததால் அந்தப்பணத்தை 1 மணி நேரத்தில் திரும்பவும் வாங்கி விட்டேன்.

நான் எந்த கட்சிக்கும் மாறவில்லை. இப்போதும் கருணாநிதிதான் என் தலைவர். அவரைப் பற்றி ஒரு புத்தகம் எழுதஉள்ளேன். அதில் எனக்குத் தெரிந்த உண்மைகளை எழுதப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

முன்பு ஒரு முறை சினிமா நடிகை ராதிகாவால் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார் ஆலடி அருணா. இப்போதுஎன்கெளண்டரில் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வியால் போட்டியிடும்வாய்ப்பை இழந்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X