பா.ஜ.கவில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், நடிகை பல்லவி, பேராசியர் தீரன்
சென்னை:
நடிகை பல்லவி, தமிழ் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் தீரன் ஆகியோர் இன்று பா.ஜ.க. தலைவர்வெங்கையா நாயுடு முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பா.ஜ.க. கூட்டணிக்காகபிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
விஜயகாந்த் நடித்த தர்மதேவதை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பல்லவி. ரஜினிஉள்ளிட்ட பல்வேறு நாயகர்களுடன் பல படங்களில் நடித்துள்ள அவர் சமீப காலமாக படங்கள் எதிலும்நடிக்கவில்லை. டிவி தொடர்களில் தலைகாட்டி வருகிறார். மைக் மோகனுடன் கிசுகிசுகப்பட்டவர், சில பலவிஷயங்களிலும் அவர் பெயர் அடிபட்டதுண்டு.
இந் நிலையில் அவர் இன்று சென்னையில் வெங்கையா நாயுடு முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார். தமிழகம்முழுவதிலும் பா.ஜ.கவை ஆதரித்துப் பிரசாரம் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல, பா.ம.கவில் முக்கியப் பதவியில் இருந்து பின்னர் ராமதாஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக அக் கட்சியிலிருந்து விலகி தமிழ் பா.ம.க. என்ற பெயரில் கட்சி நடத்தி வந்த பேராசியர் தீரனும் இன்றுபா.ஜ.கவில் இணைந்தார்.
அவர் கூறுகையில், ராமதாஸ் தனது குடும்பத்தையும், மகனையும் வளர்க்கவே பாமகவை நடத்தி வருகிறார்என்றார்.
இதேபோல முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தீவிரப் பிரசாரம்செய்யப் போவதாக அறிவித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பாரதீய ஜனதாக் கட்சியில் நான் சேரவில்லை. அக்கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகிறேன்.படித்தவர்களும், விளையாட்டு வீரர்களும் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்ற பா.ஜ.கவின் அழைப்புஎன்னை ஈர்த்தது. அதனால்தான் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்தேன். கட்சியில் இணைவது குறித்து பின்னர் முடிவுசெய்வேன்.
வாஜ்பாயின் தலைமையில் இந்தியா ஒவ்வொரு துறையிலும் முன்னேறுகிறது. கிரிக்கெட்டில் கூட இந்தியாபிரகாசித்து வருகிறது. என்னை கட்சியில் சேருமாறு பா.ஜ.கவில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. யாரும்என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. அத்வானியின் ரதயாத்திரையில் நாளை நானும் கலந்து கொள்வேன்.
பா.ஜ.க நல்ல அணி. அதில் வாஜ்பாய் திறமையான கேப்டனும், அத்வானி, வெங்கைய்யா நாயுடு, பிரமோத்மகாஜன், அருண் ஜேட்லி போன்ற திறமையான ஆட்டக்காரர்களும் உள்ளனர். இந்த அணி நன்றாகவேவிளையாடும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கைய்யா நாயுடு,
துணைப் பிரதமர் அத்வானியின் ரத யாத்திரை வகுப்புக் கலவரங்களை உண்டாக்கும் என்று காங்கிரஸ் கட்சி கூறிவருவது ஆதாரமில்லாத குற்றச்சாட்டாகும். சிறுபான்மையினரை பா.ஜ.கவுக்கு எதிராகத் தூண்டிவிடப்பார்க்கிறார்கள். உண்மையில் அத்வானியின் இந்தப் பிரச்சாரம் நாட்டில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தப்போகிறது.
நாட்டு மக்களிடம் பா.ஜ.கவுக்கு ஆதரவான மனநிலை உள்ளது. இந்த மனநிலையை பா.ஜ.கவுக்கு ஆதரவானஅலையாக அத்வானியின் இந்த யாத்திரை மாற்றும். ஒவ்வொரு துறையில் உள்ள மக்கள் பா.ஜ.கவில் சேர்ந்தவண்ணம் உள்ளனர். இதையெல்லாம் பார்த்த அச்சத்தில்தான் காங்கிரஸாரும், கம்யூனிஸ்ட்களும் ஆதரமற்றகுற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்கள்.
அத்வானி பிகாருக்குள் வந்தால் அவரைக் கைது செய்யப் போவதாக ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவர் லல்லுபிரசாத் யாதவ் கூறியுள்ளார். அதை சட்டரீதியாக எதிர் கொள்வோம். சினிமா நடிகர், நடிகைகள் அரசியல்கட்சிகளில் சேர்வது தவறில்லை. அவர்களும் சமுதாயத்தின் ஒரு அங்கம்தான் என்றார்.
அப்போது மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், காமெடி நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை விஜயசாந்தி ஆகியோரும்உடனிருந்தனர்.
சில மாதங்களுக்கு முன் சென்னையில் பல்வேறு நடிகைகள் விபச்சாரம் செய்ததாக பிடிபட்டனர். மேலும் பலநடிகைகள் போலீஸாரின் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் பல்லவியின் பெயரும் அடிபட்டதுகுறிப்பிடத்தக்கது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications