கருணாநிதி என் அண்ணன்... வைகோ என் தம்பி !
திருச்சி:
திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் எல்.கணேசன் எதையாவது பேசிவைகோவுக்கு அவ்வப்போது சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தஞ்சையைச் சேர்ந்த எல்.கணேசனுக்கு தஞ்சாவூர் தொகுதியை திமுக ஒதுக்கவில்லை. இதனால் திருச்சியில்போட்டியிடுகிறார்.
அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டு எதையாவது உளறிக் கொட்டவும் தவறாத கணேசன், தவறாமல் செய்யும்இன்னொரு வேலை திமுக தலைவரையும் தனது கட்சித் தலைவரையும் வாயார புகழ்வது தான்.
சமீபத்தில் முத்தரையர் சமூகத்தினர் குறித்து வைகோவையும் மேடையில் வைத்துக் கொண்டு எல்.கணேசன்மோசமாகப் பேச, திருச்சியில் அந்த சமூக மக்கள் அதிகமாக வசிப்பதால், அதிர்ச்சியில் ஆழ்ந்த ஓடிப் போய்எல்.கணேசனிடம் இருந்து மைக்கைப் பிடுங்கினார்.
பின்னர் முத்தரையர் சமூகத் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தமும் தெரிவித்தார்வைகோ. இதனால் அப் பிரச்சனை அத்தோடு முடிந்தது.
திருச்சி பகுதி திமுகவினரையும் எல்.கணேசன் மரியாதையாக நடத்தாதால் அவர்கள் பிரச்சாரத்துக்கே வராமல்ஒதுங்க, அதை கருணாநிதியிடம் வைகோ எடுத்துச் சொல்லிய பின்னர் தான் நிலைமை சரியானது.
இப்படியெல்லாம் எல்.கணேசன் ஏதாவது குளறுபடிகள் செய்தாலும், தான் சிறையில் இருந்த காலத்தில் மதிமுகவைகட்டுக் குலையாமல் பார்த்துக் கொண்டவர் என்பதற்காக அவருக்காக ரொம்பவே சிரத்தை எடுத்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் வைகோ.
மேடைகளில் பேசும்போது எல்.ஜி. மறக்காமல் குறிப்பிடும் ஒரு வாசகம்.. கருணாநிதி எனக்கு அண்ணன். வைகோஎன் தம்பி என்பது.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications