For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினியோடு தொடரும் முரண்பாடுகள், குழப்பங்கள், தயக்கங்கள்!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஒரு வழியாக மனதை கொஞ்சம் திறந்துள்ளார் ரஜினிகாந்த். பாஜகவுக்கு தனது ஆதரவை பகிரங்கமாகவேதெரிவித்துள்ளார். ஆனால் அவரது பேச்சு முழுக்கவே பல தடுமாற்றங்கள், குழப்பங்கள், முரண்பாடுகளைக் காணமுடிகிறது.

தனது சினிமாவுக்கும் ரசிகர்களுக்கும் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவே பாமகவை எதிர்க்கிறார். மற்றபடி அதில்பொது நலன் என்ற விஷயம் ஏதும் கடுகளவும் இல்லை.

பா.ஜ.கவை ஆதரித்துள்ளதன் மூலம் அதனுடன் இருக்கும் அதிமுகவுக்கும் மறைமுக ஆதரவையேவழங்கியிருக்கிறார் ரஜினி. இதனால் வலியப் போய் தான் கொடுத்த ஆதரவை அதிமுக உதாசீனப்படுத்துவதுகுறித்து ரஜினி கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.

அதே நேரத்தில் ஜெயலலிதாவுக்கு சமாதானக் கொடியையும் பறக்க விட முயல்கிறார் ரஜினி. ராமதாஸ் மீதுகொலை முயற்சி வழக்கு போட்டதற்காக தமிழக அரசை (முதல்வர் ஜெயலலிதாவை) வாயார புகழ்ந்திருக்கிறார்ரஜினி.

ரஜினி என்றாலே ஜெயலலிதா எதிர்ப்புதான் தமிழக மக்களுக்கும், ரஜினிகாந்த்தை அறிந்தவர்களுக்கும் நினைவுக்குவரும். அப்படிப்பட்ட ரஜினிகாந்த், தமிழகத்தில் ஜெயலலிதாவை (தேசிய ஜனநாயகக் கூட்டணியை) ஆதரிக்கச்சொன்னால் அது தமிழக மத்தியில் எந்த அளவுக்கு எடுபடும் என்று புரியவில்லை.,

அதே போல இருமுறை ஆதரவு தந்த திமுகவுக்கு இந்த முறை ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை என்ற நிலையைஎடுத்திருக்கிறார். திமுக தரப்பில் ப.சிதம்பரம் மூலமாக ரஜினியிடம் சமரசம் பேசப்பட்டு அதில் கொஞ்சம் வெற்றிகாணப்பட்டுள்ளதையே அவரது அறிக்கை நிரூபிக்கிறது.

தனக்கு இத்தனை நெருக்குதல்கள், கட்டாயங்கள் ஏற்பட்ட பின்னரும் கூட தெளிவான, உறுதியான முடிவு எடுக்கமுடியாமல் ரஜினி தடுமாறுவதையே அவரது இன்றைய நிலை காட்டுகிறது.

நான் பாஜகவுக்கு ஓட்டுப் போடப் போகிறேன், நீங்கள் அதே போல சிந்தித்து வாக்களியுங்கள் என்று ரஜினிகூறியுள்ளதை, கொந்தளித்துப் போயுள்ள அவரது ரசிகர்கள் எந்தளவுக்கு எடுத்துக் கொள்வார்கள் என்றுதெரியவில்லை.

மேலும் நதிகள் இணைப்பு தவிர தமிழர்களுக்கு வேறு பிரச்சனையே கிடையாது என்பதைப் போல, அந்த ஒருவிவகாரத்தை மட்டும் பேசிவிட்டு, தமிழ் நாட்டின் பிற பிரச்சனைகள் குறித்து ரஜினி வாயே திறக்காததுகுறிப்பிடத்தக்கது.

பா.ஜ.கவுக்கு ஆதரவாக குரல் தருவது என்று முடிவு செய்துவிட்டு, அதற்காக அவர் தேடிப் பிடித்துள்ள காரணம்தான் நதிகள் இணைப்பு என்றே தோன்றுகிறது.

மேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தண்ணீர்ப் பிரச்சினையை திமுக பெரிதாக்கி வருவதால், அதைவைத்தே பா.ஜ.கவுக்கு ஓட்டு கேட்கும் ரஜினியின் தந்திரமும் புரிகிறது.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் சக்திகளின் கைகளில் ரஜினிமெதுவாக ஆட்பட ஆரம்பித்துவிட்டதையே அவரது அறிக்கை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

தண்ணீர்ப் பிரச்சினை ஒன்றை மட்டுமே முக்கியமாகக் கொண்டு பாஜகவுக்கு ஓட்டுப் போடப் போவதாக கூறும்ரஜினிகாந்த், பாபர் மசூதி இடிப்பை ஏற்கிறாரா? அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்றபா.ஜ.கவின் நிலையை ஆதரிக்கிறாரா?. பதில் இல்லை.

மொத்தத்தில் ரஜினியின் அறிக்கை வழக்கம் போல வள..வளா.. கொழ.. கொழாவாகத் தான் உள்ளது.

தங்களது தலைவரின் அரசியல் வருகையை எதிர்பார்த்த பல வருடங்களாக தேவுடு காத்துக் கொண்டிருந்தரசிகர்கள் மத்தியில், பாமகவிரின் பிரச்சனையை வைத்து இந்த முறையாவது உறுதியான, தெளிவான முடிவைஎடுப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் வழக்கம்போல் இப்போதும் நழுவி விட்டார் ரஜினி.

அதே நேரத்தில் வன்னிய சமூக மக்களே, நான் ராமதாஸுக்கு ஏதாவது கெடுதல் செய்துள்ளேனா என்று மிகவும்உருக்கமாக ரஜினி கேட்டுள்ளார். இது மட்டுமே ஓரளவுக்கு ரஜினிக்கு உதவலாம். அவரது இந்தக் கேளிவி வடமாவட்டங்களில் அவருக்கு ஓரளவு அனுதாபத்தைத் தேடித் தரலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X