For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் யாரு.. எனக்கே தெரியலையே..: டி.ராஜேந்தர் சோகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நான் திமுகவில் இருக்கிறேனா இல்லையா என்பதற்கு கருணாநிதி வரும் 26ம் தேதிக்குள் பதில்சொல்ல வேண்டும் என்று கெடு விதித்துள்ளார் டி. ராஜேந்தர்.

திமுக இலக்கிய அணியில் இருந்து வரும் இயக்குனர்-நடிகர் டி.ராஜேந்தர் சமீப காலமாக கட்சித்தலைமையால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். கட்சியில் இருந்தாலும் கூட அவருக்கு எந்தக்கூட்டத்துக்கும் அழைப்பு வருவதில்லை.

அப்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக அறிக்கை, பேட்டி தந்துவிட்டு அமைதியாக இருந்துவந்தார் டி.ராஜேந்தர். இதனால் தன்னை கட்சியை விட்டு நீக்குவார்கள், வேறு கட்சியில் சேரலாம்என்று எதிர்பார்த்தார். ஆனால், அப்படியும் ஏதும் நடக்கவில்லை.

திமுக தலைமை அமைதி காத்தது. இந் நிலையில் மக்களவைத் தேர்தல் வந்தது. பிரச்சாரம்செய்யவாவது கூப்பிடுவார்கள் என்று நினைத்தார். அந்த அழைப்பும் வரவில்லை.

இதையடுத்து மிகக் காட்டமான அறிக்கையை வெளியிட்டு கட்சித் தலைமை மீதான தனது கோபத்தைவெளிப்படுத்தியுள்ளார் ராஜேந்தர். அதன் விவரம்:

விழுப்புரம் திமுக மாநாட்டுக்கு என்னை அழைக்காதது குறித்து நிருபர்கள் என்னிடம் கேள்விகேட்டனர். அதற்கு நான் கட்சியில் இருக்கிறேனா இல்லையா என்பதை கருணாநிதி தான் சொல்லவேண்டும் என்று பதில் கூறியிருந்தேன்.

ஆனால், இன்று வரை கருணாநிதி தனக்கே உரிய சாதுர்ய குணத்துடன், சாணக்கியத்தனத்துடன்மெளனம் சாதித்து வருகிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது அலட்சியப்படுத்துகிறார்என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

இப்போது தேர்தல் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் நான்சொல்லிக் கொள்ள விரும்புவது எல்லாம், நான் மட்டும் திமுகவில் இணையவில்லை.

திமுகவை விட்டு வைகோ பிரிந்து போனபோது கட்சி ஒரு இக்கட்டான சூழலில் இருந்தது. அபோதுதம்பி, நீ உன் தாயக மறுமலர்ச்சிக் கழகத் தொண்டர்களோடு கலந்து பேசி ஒரு நல்ல முடிவெடுத்துதாய்க் கழகத்துக்கே திரும்பி வா என்று கருணாநிதி அன்பு வேண்டுகோள் விடுத்தார்.

அவரது அழைப்பை ஏற்று, நான் அரும்பாடுபட்டு 6 வருடம் வளர்த்த ஒரு இயக்கத்தை மயிலாப்பூர்மாங்கொல்லையில் நடந்த விழாவில் வைத்து திமுகவுடன் இணைத்தேன்.

ஆனால், இன்று நாடாளுமன்றத் தேர்தலில் மிக பலமான கூட்டணி அமைத்துவிட்டோம் என்றநினைப்பில் இருக்கும் கருணாநிதி, நான் திமுகவில் இருக்கிறேனா இல்லையா என்று பதில் தரக் கூடமறுக்கிறார்.

இதனால் என்னை நம்பி திமுகவுக்கு வந்த தொண்டர்கள், ரசிகர்கள், அபிமானிகள் அனைவரும்இந்தத் தேர்தலில் நம் பங்கு என்ன?, பணி என்ன?, இப்படி நம்மை ஓரம்கட்டிவைத்திருக்கிறார்களே, எத்தனை நாட்கள் தான்பொறுமை காப்பது, எங்களுக்கு ஒரு பதில்சொல்லுங்கள் என்று ஏக்கத்துடன் என்னைப் பார்த்து வினா எழுப்புகிறார்கள்.

ஏதாவது ஒரு முடிவெடுங்கள் என்று வற்புறுத்துகிறார்கள். அதனால் வரும் 26ம் தேதி சென்னைதியாகராயர் அரங்கத்தில் எனது ரசிகர் மன்றத் தோழர்கள், நலம் விரும்பிகள், ஆதரவாளர்களுடன்ஆலோசனை நடத்த இருக்கிறேன்.

அதன் பின் என் முடிவை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார் டி.ஆர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X