தேர்தல் ஆணையர்களிடம் திமுக, காங்கிரஸ் புகார்
சென்னை:
ஆளுங்கட்சியினர் கள்ள ஓட்டுப் போடவும், வன்முறையை அரங்கேற்றவும் திட்டமிட்டிருப்பதால் பலத்தபாதுகாப்புடன் வாக்குப் பதிவை நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல்ஆணையர்களை வலியுறுத்தியுள்ளனர்.
தேர்தல் ஆணையர்கள் கோபால்சாமி, டாண்டன் ஆகியோர் சென்னை வந்துள்ளனர். இன்று காலை தலைமைத்தேர்தல் அதிகாரி சாரங்கி, தமிழக தேர்தல் பார்வையாளர் பாசு, டிஜிபி கோவிந்த், மாநகர காவல்துறை ஆணையர்நடராஜ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் பல்வேறு அரசியல் கட்சிகளின்பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது ஆளுங்கட்சி மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு புகார்களைத் தெரிவித்தனர்.வாக்குப் பதிவின்போது, ஆளுங்கட்சியினர் வன்முறையைத் தூண்டவும், பெருமளவில் கள்ள ஓட்டுப் போடவும்திட்டம் தீட்டியிருப்பதால், வாக்குப் பதிவு தினத்தன்று பலத்த பாதுகாப்பு போட வேண்டும் என்று தேர்தல்ஆணையர்களிடம் கோரிக்கை விடுத்ததாக திமுக சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆற்காடு வீராசாமிதெரிவித்தார்.
எதிர்க்கட்சியினன் தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களின்போது காவல் துறையினர் கடும் கெடுபிடிசெய்வதாகவும், இதை தேர்தல் ஆணையம் கண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்ததாக காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்ட பாரமலை கூறினார்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக, பா.ஜ.க பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!











Click it and Unblock the Notifications