வீரப்பன் கோட்டையில் ஓட்டு வேட்டை!
ஈரோடு:
வீரப்பன் ஆதிக்கம் உள்ள கிராமங்களில் கோபிச் செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும்அதிமுக வேட்பாளர்கள் அதிரடிப்படை பாதுகாப்புடன் ஓட்டு வேட்டையாடுகின்றனர்.
கோபிச் செட்டிப்பாளையம் தொகுதியின் கீழ் சத்தியமங்கலம், திம்மம் உள்ளிட்ட வனப் பகுதிகள் வருகின்றன.இந்தப் பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு வீரப்பன் நிடமாட்டம் உள்ளது. இதனால் இவைஎப்போதுமே பதற்றம் நிறைந்த பகுதிகளாக காணப்படும்.
இருப்பினும் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளதால், இந்தக் கிராமங்களிலும் தேர்தல் களைகட்டியுள்ளது. தங்களது அபிமான கட்சிகளுக்கு ஆதரவாக தட்டிகளை வைத்தும், கொடிகளைக் கட்டியும் தேர்தல்களத்தில் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
இந் நிலையில் கோபி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இந்த மலைகிராமங்களில் பிரசாரம் செய்துள்ளார். ஆனாலும், திம்மம்- மைசூர் நெடுஞ்சாலை, திம்மம்- கொள்ளேகால்நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களுக்கு மட்டுமே அவரால் போக முடிந்தது.
வீரப்பன் பீதி காரணமாக உள்ளடங்கிய கிராமங்களுக்குச் செல்ல அவருக்கு அதிரடிப்படை அனுமதிகொடுக்கவில்லை. இது இளங்கோவனுக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது. அவர் கூறுகையில்,
சத்தியமங்கலம் சட்டசபைத் தொகுதி உறுப்பினராக நான் இருந்துள்ளேன். அப்போதெல்லாம் இதுபோன்றகெடுபிடிகள் இருந்ததில்லை. ஆனால் இப்போது வாக்காளர்களை சந்திக்கக் கூட அதிரடிப்படை அனுமதி பெறவேண்டியுள்ளது என்றார் அவர்.
இதேபோல, வேட்பாளர்கள் தாங்கள் பிரசாரம் செய்யப் போகும் இடத்தை முன் கூட்டியேஅதிரடிப்படையினருக்குத் தெரிவிக்க கோரப்பட்டுள்ளார்கள். அதிரடிப்படை அனுமதி கிடைத்தவுடன், அவர்களதுபாதுகாப்புடன் அப்பகுதியில் பிரசாரம் செய்ய வேட்பாளர்களுக்கு அனுமதி கிடைக்கிறது.
இதை வேட்பாளர்கள் அசவுகர்யமாக உணர்ந்தாலும் கூட அவர்களது பாதுகாப்பு கொடுக்க வேண்டியது எங்களதுகடமை என்று அதிரடிப்படை தலைவர் விஜயக்குமார் கூறுகிறார். மேலும், தேர்தலையொட்டி, முக்கிய இடங்களில்அதிரடிப்படையினர் கூடுதலாக குவிக்கப்படவுள்ளதாகவும் விஜயக்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications