மிஸ் கூவாகம்- 2004: மும்பை பாபி டார்லிங் தேர்வு
விழுப்புரம்:
| விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் நடந்த மிஸ் கூவாகம் போட்டியில் மும்பையைச் சேர்ந்தஅரவாணியான பாபி டார்லிங் மிஸ் கூவாகம்-2004 ஆக தேர்வு செய்யப்பட்டார்.
முதல் மூன்று இடங்களையும்மும்பையைச் சேர்ந்த "அழகிகளே" பெற்றனர். கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அரவாணிகள் கூடிவழிபடுவார்கள். சித்திரை பெளர்ணமியன்று அரவாணிகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார். |
இந்த ஆண்டும் சித்திரைத் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கூவாகத்தில் நடந்து வருகிறது. விழாவையொட்டிநாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரவாணிகளும் கூவாகத்தில் குழுமியுள்ளனர். பாட்டு, நடனம் என கலக்கிவருகிறார்கள்.
இந் நிலையில் நேற்று மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடந்தது. இதில் பல்வேறு அரவாணிகள் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்ட அரவாணிகள் அட்டகாசமான உடைகள், மேக்கப்புடன் கலந்து கொண்டுபார்வையாளர்களை அசத்தினர். அச்சு அசல் பெண்கள் போலவே சிலர் காணப்பட்டதால் உண்மையானபெண்களா என்ற சந்தேகம் கூட சிலருக்கு எழுந்தது.
இறுதியில் மும்பையைச் சேர்ந்த பாபி ராணி என்ற பாபி டார்லிங் மிஸ் கூவாகமாகத் தேர்வு செய்யப்பட்டார்.
| அவருக்கு கிரீடம், பரிசுகள் வழங்கப்பட்டன.
அடுத்த இரண்டு இடங்களையும் மும்பையைச் சேர்ந்தஅரவாணிகளான ரக்ஷாவும் லட்சுமியும் பிடித்தனர். அடுத்த மூன்று இடங்களை திருச்சி ரஜியா, சென்னை லைலா, பெங்களூர் காஞ்சனா ஆகியோர் பிடித்தனர். முதலிடம் பிடித்த பாபி டார்லிங் கூறுகையில், அடுத்த ஜென்மத்திலும் அரவாணியாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்என்றார். |
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு














Click it and Unblock the Notifications