மதுரை உயர் நீதிமன்ற கிளை: மே 17ம் தேதிக்குள் திறப்பு?
சென்னை:
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளையை மே 17ம் தேதிக்குள் திறப்பதற்கு உரியநடைமுறைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிகடிதம் எழுதியுள்ளார்.
மதுரை உலகநேரியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை ரூ. 50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டும் திறப்பு விழா தள்ளிப் போய்க் கொண்டே வந்தது.
ஒரு வழியாக கடந்த ஏப்ரல் 13ம் தேதி கட்டடம் திறக்கப்படும் என்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிஅறிவித்தார். ஆனால் சட்ட நடைமுறைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதனால் திட்டமிட்டபடிதிறப்பு விழா நடைபெறவில்லை.
இந் நிலையில் தற்போது சட்ட நடைமுறைச் சிக்கல்கள் முடிந்து விட்டதாகவும், எனவே வருகிற 17ம் தேதிக்குள்கிளை திறப்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்யுமாறும் மத்திய அரசுக்கு நீதிபதி சுபாஷன் ரெட்டி கடிதம்எழுதியுள்ளார்.
மதுரை உயர் நீதிமன்றக் கிளை இயங்கத் தொடங்கியதும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தென்மாவட்டங்களைச் சேர்ந்த சிவில், குற்றவியல் வழக்குகள் அனைத்தும் மதுரைக்கு மாற்றப்படும். அதேபோல,மதுரை கிளைக்கு மாற்றலாகிச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறைஊழியர்களும் மதுரைக்கு மாற்றப்படுவர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications