மதிமுக வேட்பாளரை துப்பாக்கியால் சுட்ட அமைச்சர் இன்பத் தமிழன்: பதிலுக்கு மக்கள் அரிவாள் வெட்டு
சிவகாசி:
சிவகாசி தொகுதி மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மாநில இளைஞர்நலத்துறை அமைச்சர் இன்பத் தமிழனை பொது மக்கள் விரட்டி, விரட்டி அரிவாளால் வெட்டினர். இதில் அவர்காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிவகாசி தொகுதியின் அதிமுக வேட்பாளரான கண்ணன் இன்று காலை தேர்தலை கண்காணிக்க சிப்பிப்பாறைபகுதிக்கு சென்றார். அப்போது ஒரு தனியார் டிவியின் சார்பில் வாக்களித்தவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
அங்கு சென்ற கண்ணனுக்கும் டிவிக்கு பேட்டி தந்த பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனையடுத்து அந்த பகுதி மக்கள் கண்ணனின் கார் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் அவரது கார் சேதம்அடைந்தது. இதையடுத்து கண்ணனுடன் வந்த அதிமுகவினர் தாக்கியதில் டிவி குழுவினரும் சில பொது மக்களும்காயமடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்து பொது மக்கள் அதிமுக வேட்பாளர் கண்ணனைத் தாக்கினர். இதில் காயமடைந்தஅவரை அதிமுகவினர் காப்பாற்றி அழைத்துச் சென்றனர்.
இந்தத் தகவல் அமைச்சர் இன்பத்தமிழனை எட்டியதும், அவர் அடியாட்கள் மற்றும் தனது பாதுகாப்புக்கு வந்தபோலீசாருடன் சிப்பிப்பாறைக்குக் கிளம்பினார்.
சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் என்ற கிராமம் அருகே அவரது கார் சென்றபோது, எதிரே மதிமுகவேட்பாளர் ரவிச்சந்திரனின் கார் வந்தது.
உடனே ரவிச்சந்திரனின் காரை இன்பத்தமிழனின் கார் வழிமறித்தது. தன்னைத் தாக்கும் நோக்கில் இன்பத் தமிழன்வருவதைப் பார்த்ததும், சுதாரிப்படைந்த ரவிச்சந்திரன் காரை வேகமாக ஓட்டுமாறு தனது டிரைவருக்குஉத்தரவிட்டுள்ளார். இதையடுத்து டிரைவர் காரை வேகமாக அங்கிருந்து ஓட்டிச் சென்றார்.
அந்தக் காரை அமைச்சரின் கார் துரத்திக் கொண்டு வந்தது. வெங்கடாசலபுரம் என்ற ஊரில் ரவிச்சந்திரனின் காரைஇன்பத் தமிழனின் கார் பின்பக்கமாக மோதியது. படு வேகத்தில் ரவிச்சந்திரனின் காரை இடித்து ஓரம் கட்டியதுஅமைச்சரின் கார்.
காரில் இருந்து இறங்கிய இன்பத்தமிழன், அதிமுக வேட்பாளர் தாக்கப்பட்ட பிரச்சனை குறித்து கேட்டு தகராறில்ஈடுபட்டார். ரவிச்சந்திரன் பதிலுக்குப் பேசியபோது தன்னிடம் இருந்த தன்னிடமிருந்த கைத் துப்பாக்கியால்ரவிச்சந்திரனை நோக்கி 6 முறை சுட்டார் அமைச்சர். ஆனால், அவர் தப்பியோடியதால் மீது குண்டு பாயவில்லை.
இதைப் பார்த்த பொது மக்கள் விரைந்து வந்து ரவிச்சந்திரனைக் காப்பாற்றி அருகில் இருந்த ஒரு வீட்டில்பாதுகாப்பாக வைத்தனர்.
இதையடுத்து பொது மக்களுடன் தகராறு செய்தார் அமைச்சர் இன்பத்தமிழன். இதையடுத்து அவரைச் சூழ்ந்துகொண்டு மக்கள் கோஷமிட்டனர். ஆத்திரமடைந்த அவர், துப்பாக்கியால் சுடுமாறு தனது பாதுகாவலருக்குஉத்தரவிட, உடனே அவரும் சுட்டுள்ளார். ஆனால், இதில் அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயமடையவில்லை.
அமைச்சரின் செயலைக் கண்டு கடும் எரிச்சலடைந்த மக்கள் அவரை அரிவாள்களால் விரட்டி, விரட்டித் தாக்கினர்.இதில் இன்பத்தமிழனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அமைச்சரின் காரையும் மக்கள் அடித்துஉடைத்தனர்.
போலீசார் அமைச்சரை காப்பாற்றி, மீட்டுச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். சிப்பிப்பாறையில் தாக்கப்பட்டஅதிமுக வேட்பாளர் கண்ணனும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் வேட்பாளர் கண்ணன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அமைச்சர் இன்பத்தமிழன்தொடர்ந்து மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு தகவல் தரப்பட்டது. உடனடியாக வெங்கடாசலம்கிராமத்துக்கு விரைந்த வைகோ, வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனைச் சந்தித்து சம்பவம் குறித்துவிசாரித்தார். இது குறித்து காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார். மேலும் தலைமைத் தேர்தல்ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு அவசரத் தந்தியையும் வைகோ அனுப்பியுள்ளார்.
அமைச்சர், அதிமுக வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.துப்பாக்கியால் சுட்டு ரெளடித்தனம் செய்த இன்பத்தமிழன் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
இந்தச் சம்பவங்களால் அப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.சாத்தூர் சாலையில் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இது ஜாதிக் கலவரமாக உருவெடுக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் மதுரை மாவட்டத்தில் இருந்துஆயுத போலீசார் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இச் சம்பவம் குறித்து தேர்தல் கமிஷன் உடனடியாகத் தலையிட்டு அமைச்சர் இன்பத்தமிழன் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரியுள்ளார். தேர்தல் கமிஷனுக்குஅவர் அனுப்பியுள்ள புகாரில், மதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் நூலிழையில் அமைச்சரின்துப்பாக்கிக் குண்டில் இருந்து தப்பியுள்ளார் என கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications