ஜெ. மீது திருநாவுக்கரசர் கடும் தாக்கு
சென்னை:
ஜெயலலிதாவின் அகம்பாவம், ஆணவம் காரணமாகவே பாஜக-அதிஞிஞ்க கூட்டணிக்கு தமிழகத்தில் படுதோல்விகிடைத்துள்ளது என்று மத்திய அமைச்சரும், ஜெயலலிதாவால் புதுக்கோட்டை தொகுதி மறுக்கப்பட்டவருமானதிருதிாவுக்கரசர் கூறியுள்ளார்..
தனியார் தொலைக்காட்சிகளில் தேர்தல் முடிவு குறித்து அவர் கருத்து கூறுகையில், வேறு வழியில்லாமல்தான்அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். ஆனால் முதல் கோணல் முற்றும் கோணல் போல, பாஜகவை தனதுகட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவே முதல்வர் ஜெயலலிதா ஆர்வம் காட்டினார்.
எனக்கு புதுக்கோட்டை கிடையாது, தமிழகத்தில் எங்கும் போட்டியிடக் கூடாது, பாஜக பிரசாரத்திற்குக் கூட நான்வரக் கூடாது, நான் கூட்டத்திற்கு வந்தால் அதிமுகவினர் வரக் கூடாது என்று அடுத்த கட்சியின் விவகாரங்களில்தலையிட்டு வெற்றி வாய்ப்பை தட்டிக் கழித்து விட்டது அதிமுக.
நான் கூட்டத்திற்கு வந்தால் நாங்கள் வர முடியாது என்று அதிமுக அமைச்சர்கள் எங்களது கட்சித் தலைமையைமிரட்டினார்கள். அம்மா திட்டுவார் என்று காரணம் கூறினார்கள்.
எல்லாம் நானே என்ற அகம்பாவ உணர்வுடன் அதிமுக தலைமை செயல்பட்டது. வெற்றி வாய்ப்புள்ளதொகுதிகளை பாஜகவுக்குக் கொடுக்காமல் வேண்டும் என்றே தோற்கக் கூடிய தொகுதிகளை ஒதுக்கியது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவராகவே முன்வந்து அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தார். அதை முறையாகபயன்படுத்தவில்லை. ரஜினி புகைப்படத்தைப் பயன்படுத்திய அதிமுகவினரை கட்சியை விட்டு நீக்கினார்கள்.
இதுபோல நடந்தால் எப்படி ரஜினி ரசிகர்கள் அதிமுகவுக்கு ஓட்டு கேட்பார்கள்?
இதேபோல, பிரசாரத்திற்கும் தன்னைத் தவிர வேறு யாரும் வரக் கூடாது என்பது போல அதிமுக தலைமை நடந்துகொண்டது. இத்தகைய போக்கு காரணமாகவே அதிமுகவும், அதனுடன் சேர்ந்ததால் பாஜகவும் தோல்வியைத்தழுவின என்றார் திருநாவுக்கரசர்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications