அதிமுகவை தோற்கடித்த 22.56% வாக்குகள்
சென்னை:
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 57.4 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இது கடந்ததேர்தலில் திமுக கூட்டணி பெற்றதை விட 22.56 சதவீதம் அதிகமாகும்.
திமுக, பா.ம.க., மதிமுக, மா.கம்யூ, இந்திய கம்யூ, இ.யூ. முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்து இம்முறை 57.4சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன.
அதே நேரத்தில் 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிட்டால் அதிமுகவின் வாக்கு விகிதம் இந்தத்தேர்தலில் 1.63 சதவீதம் மட்டுமே சரிந்துள்ளது.
2001ம் ஆண்டில் 31.4 சதவீத வாக்குகளைப் பெற்ற அதிமுக இம்முறை 29.77 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதே நேரத்தில் 2001ம் ஆண்டு தேர்தலில் 30.9 சதவீத வாக்குகளை வென்ற திமுக இம்முறை 23.08வாக்குகளையே பெற்றுள்ளது. வாக்கு விகிதம் குறைந்துள்ளதற்கு அக் கட்சி வெறும் 15 தொகுதிகளில் மட்டும்போட்டியிட்டது ஒரு காரணம்.
அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிட்டு 29.77 சதவீத வாக்குகளை வென்றுள்ள நிலையில் 15 தொகுதிகளில்மட்டுமே போட்டியிட்ட திமுக 23.08 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 2001ம் ஆண்டை விட 5 சதவீதம் அதிகரித்துள்ளது. த.மா.கா.-காங்கிரஸ் இரு கட்சிகளும் மொத்தமே 9.2 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தன. இந்தத் தேர்தலில் இரண்டும்இணைந்துவிட்ட நிலையில் அக் கட்சிக்கு 14.4 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
பா.ம.கவின் வாக்கு சதவீதம் 1999ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. அப்போது 7 தொகுதிகளில்போட்டியிட்டு 8.21 சதவீத வாக்குகளைப் பிடித்து 5 இடங்களில் வென்ற பா.ம.க., இம்முறை 6 இடங்களில்போட்டியிட்டு 6.71 சதவீத வாக்குகளைப் பெற்று அனைத்து இடங்களிலும் வென்றுள்ளது.
கடந்த தேர்தலைவிட ஒரு தொகுதி குறைவாக போட்டியிட்டதாலும் ரஜினியின் எதிர்ப்பு காரணமாகவும்பா.ம.கவின் வாக்கு சதவீதத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது.
கூட்டணியின் மற்ற கட்சிகளோடு ஒப்பிடுகையில், பா.ம.க வேட்பார்களின் வாக்கு வித்தியாசம் குறைவே.
மதிமுக, இடதுசாரிக் கட்சிகளின் வாக்கு விகிதம் கடந்த தேர்தலைப் போலவே தான் உள்ளது. அதில் அதிக மாற்றம்இல்லை.
ஆனால், பா.ஜ.கவின் வாக்கு விகிதம் 2 சதவீதம் குறைந்துள்ளது. 1999ம் ஆண்டில் 7.14 சதவீத வாக்குகளைவென்ற பா.ஜ.க. இம்முறை கூடுதலாக இரு இடங்களில் போட்டியிட்டும் கூட 5.07 சதவீத வாக்குகளையேவென்றுள்ளது.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications