அலையில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள் கூட்டணி
சென்னை:
தமிழகம் முழுவதும் ஆளும் கட்சிக்கு எதிராகவும் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும் வீசிய பலத்த அலையில் திருமாவளவன்,டாக்டர் கிருஷ்ணசாமி, கண்ணப்பன் ஆகியோர் அமைத்த 3வது அணி காணாமல் போய் விட்டது.
திமுகவில் கூட்டணியில் சீட் கிடைக்காததால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சியின்நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கூட்டணியிலிருந்து வெளியேறினர்.
இவர்களும், மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவர் கண்ணப்பனும் சேர்ந்து மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய அணியைஅமைத்தனர். இவர்களோடு அகில இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சியும் கூட்டு சேர்ந்தது.
சரத்யாதவ் மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டசிடம் பேசி ஐக்கிய ஜனதா தளத்தின் அம்பு சின்னத்தில் இக் கூட்டணி போட்டியிட்டது.இவர்களுக்கு ஆதரவாக பெர்னாண்டஸ் பிரசாரமும் செய்தார்.
இவர்கள் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பது தெரியாத நிலையில் திமுக கூட்டணி கொஞ்சம்பயத்தில் தான் இருந்தது. ஆனால், அதிமுகவுக்கு எதிராக வீசிய அலையில் மக்கள் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும்காணாமல் போய்விட்டனர்.
இவர்களில் கொஞ்சம் தப்பியது திருமாவளவன் மட்டுமே.சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட இவர் பாமக வேட்பாளர்பொன்னுச்சாமிக்கு அடுத்ததாக இரணடாவது இடத்தைப் பிடித்தார்.
இவருக்கு 2,55,773 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. திருமாவளவனுக்கென்று உள்ள சொந்த செல்வாக்கின் காரணமாகவே இந்தவாக்குகள் கிடைத்துள்ளன.
அதேசமயம், டாக்டர் கிருஷ்ணசாமியும், கண்ணப்பனும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் 3வது இடத்திற்குத்தள்ளப்பட்டுள்ளனர். தென்காசியில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி, 1,01,122 ஓட்டுக்களுடன் 3வது இடத்தைப் பிடித்தார்.
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட கண்ணப்பன், 79,507 ஓட்டுக்களை மட்டுமே பெற்றார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications