அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்ய திமுக வலியுறுத்தாது: முன்னாள் அமைச்சர்
ஈரோடு:
அதிமுக அரசை நீக்கக் கோரி மத்திய அரசிடம் திமுக வலியுறுத்தாது என்று முன்னாள் திமுக அமைச்சர்என்.கே.கே.பெரியசாமி கூறியுள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக ஈரோடு நீதிமன்றத்திற்கு பெரியசாமிவந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், என் மீதான வழக்கு பொய் வழக்கு. இதைசட்டப்பூர்வமாக நிரூபிப்பேன்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனான சந்திப்பின்போது திமுக தலைவர் கருணாநிதி பல்வேறு விஷயங்கள்குறித்து விவாதித்துள்ளார். பொடாவை நீக்குவது, சென்வாட் வரியை நீக்குவது, காவிரிப் பிரச்சினை, தமிழைதொன் மொழியாக அறிவிக்கக் கோருவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும்விவாதித்தனர்.
அதிமுக அரசை நீக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோரியுள்ளது. அது அவர்களது சொந்தக் கருத்து.ஆனால் திமுக அப்படிக் கோரிக்கை விடுக்காது. அதை ஒரு நிபந்தனையாகவும் காங்கிரஸ் முன்பு திமுக வைக்காதுஎன்றார் அவர்.


Click it and Unblock the Notifications
