புதிய அமைச்சர்களுடன் இன்று சென்னை திரும்புகிறார் கருணாநிதி
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி டெல்லியிலிருந்து இன்று சென்னை திரும்புகிறார். அவருடன் புதிதாகநியமிக்கப்பட்டுள்ள 7 திமுக மத்திய அமைச்சர்களும் வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை அமைக்க உதவும்வகையில் கருணாநிதியும் மனைவி தயாளு அம்மாள், பேரனும் மத்திய சென்னை எம்.பியுமான தயாநிதி மாறன்ஆகியோரும் மே 16ம் தேதி டெல்லி சென்றனர்.
அவர்களைத் தொடர்ந்து ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகிய திமுக தலைவர்களும் டெல்லிசென்றனர். பின்னர்
மன்மோகன்சிங் தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது. இந்த அமைச்சரவையில்7 திமுக எம்.பிக்கள் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இன்று சென்னை திரும்புகிறார் கருணாநிதி. அவருடன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 திமுகஅமைச்சர்களும் வருகின்றனர்.
அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு கொடுக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
தொண்டர்களால் திக்குக்காடிய டெல்லி:
திமுக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 7 மத்திய அமைச்சர்களைப் பெற்றதை திமுகவினர் தலைநகர்டெல்லியில் பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
கருணாநிதி தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் முன் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர்.டெல்லியில் எந்த பிராந்தியக் கட்சியின் தொண்டர்களும் இந்த அளவுக்கு கூடியதில்லை என்று கூறும் அளவுக்குமிகப் பெரும் தொண்டர் கூட்டம் கருப்பு, சிவப்பு கரை வேட்டிகளுடன் ஹோட்டல் முன் காணப்பட்டது.
கருணாநிதியை வாழ்த்தி தொண்டர் கூட்டம் போட்ட கோஷத்தால் அந்தப் பகுதியே அதிர்ந்தது.
வழக்கமான பேன்ட் சட்டை இல்லாமல், தமிழக பாரம்பரியப்படி, வேட்டி, சட்டையில் தயாநிதி மாறன்பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். தாத்தா கருணாநிதியின் ஆலோசனையின் பேரில்தான் வேட்டி, சட்டைக்குமாறினாராம் தயாநிதி.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications