நெல்லை அருகே ஜாதிக் கலவரம்: இளைஞர் கொலை-வீடுகளுக்கு தீ வைப்பு
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் வாகைக்குளம் அருகே உள்ள மானூர் கிராமத்தில் இரு ஜாதியினருக்கிடையே பெரும்மோதல் மூண்டது. இதில் பல வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
திங்கள்கிழமை இரவு முதல் மானூர் கிராமத்தில் இரு ஜாதியினருக்கு இடையே மோதல் நடந்து வருகிறது.இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், போதுமான எண்ணிக்கையில் போலீசார்நிறுத்தப்படாததால் சண்டை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
தொடர்ந்து நடந்த மோதலில் ஆபிரகாம் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆபிரகாமின் ஜாதியைச் சேர்ந்தவர்கள் கும்பலாக கிளம்பி, அவரைக் கொன்ற ஜாதியைச்சேர்ந்தவர்களின் வீடுகள் மீது கடும் தாக்குதல் நடத்தினர். வீடுகளுக்கு தீ வைத்தனர்.
இதில் வாகைக்குளம் பஞ்சாயத்துத் தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட 5 பேரின் வீடுகள் தீக்கிரையாகின. ஒருகாரும், இரு சக்கர வாகனம் தீவைப்பில் சேதமடைந்தன.
பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் இதை அடக்க முடியாமல் திணறினர். இதையடுத்து கூடுதல் போலீஸார்அங்கு அனுப்பி வைக்கப்பட்டு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆபிரகாம் கொலை தொடர்பாக மதன் உள்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வீடுகள்தீவைப்பு தொடர்பாக 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்











Click it and Unblock the Notifications