மதமாற்ற தடை சட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி போராட்டம்; பாஜக பரிசீலனை
சென்னை:
கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி போராட்டம் நடத்துவது குறித்து தமிழக பாஜக பரிசீலித்து வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் குமாரவேலு கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது தவறான நடவடிக்கை ஆகும். இந்த சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி போராட்டம் நடத்துவது குறித்து தமிழக பாஜக பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.
தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதை தமிழக பாஜக வரவேற்கிறது.
தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். தற்போதைக்கு தோழமை தொடர்கிறது. மேலும் இது குறித்து பத்திரிக்கைகள் வாயிலாக விவாதிக்க முடியாது.
சட்டசபையில் அரசின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு தருவோம். பாஜக கொள்கைக்கு எதிராக இருந்தால் எதிர்ப்போம்.
இன்று பிறந்தநாள் காணும் திமுக தலைவர் கருணாநிதிக்கு பத்திரிக்கைகள் மூலம் எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் குமாரவேலு.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications