நிருபர் கேள்வி; கருணாநிதி டென்சன்சென்னை:கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்திக்கப் போகும் தமிழக குழுவில் அதிமுகவும் இடம் பெறுகிறதா என்ற கேள்விக்கு திமுக தலைவர் கருணாநிதி கோபமாக பதிலளித்தார்.காவிரிப் பிரச்சனை தொடர்பாக பிரதமரை சந்திக்கும் தமிழக தமிழக எம்.பிக்கள் குழுவில் அதிமுகவும் பங்கேற்க வேண்டும் என கருணாநிதி கோரியிருந்தார். இதை ஏற்று அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களும் குழுவில் இடம் பெற்றனர்.அதிமுகவின் இந்த முடிவை திமுக வட்டாரம் எதிர்பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந் நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, ஜெயலலிதா தொடர்பான கேள்விகளுக்கு டென்ஷனுடன் பதில் அளித்தார். சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.ஒரு நிருபர், பெங்களூரில் கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்திக்கச் செல்லும் குழுவில் அதிமுக இடம் பெறுமா? அதிமுகவை அழைப்பீர்களா என்று கேட்டபோது, கடுப்பானார் கருணாநிதி.அந்த நிருபரைப் பார்த்து இதுபோன்ற கேள்விகளை தேவையில்லாமல் கேட்காதீர்கள். வேண்டும் என்றே இதுபோல கேட்கிறீர்கள். இது மக்கள் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சினை, இதை அரசியலாக்க வேண்டாம். சில பத்திரிக்கைகள் இதை அரசியலாக்க முயற்சிக்கின்றன என்றார் கோபத்துடன்.கர்நாடக முதல்வரை சந்திக்கும் குழுவில் இடம்பெற அதிமுகவை அழைக்க மாட்டோம் என்றார்.
சென்னை:
கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்திக்கப் போகும் தமிழக குழுவில் அதிமுகவும் இடம் பெறுகிறதா என்ற கேள்விக்கு திமுக தலைவர் கருணாநிதி கோபமாக பதிலளித்தார்.
காவிரிப் பிரச்சனை தொடர்பாக பிரதமரை சந்திக்கும் தமிழக தமிழக எம்.பிக்கள் குழுவில் அதிமுகவும் பங்கேற்க வேண்டும் என கருணாநிதி கோரியிருந்தார். இதை ஏற்று அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களும் குழுவில் இடம் பெற்றனர்.
அதிமுகவின் இந்த முடிவை திமுக வட்டாரம் எதிர்பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந் நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, ஜெயலலிதா தொடர்பான கேள்விகளுக்கு டென்ஷனுடன் பதில் அளித்தார். சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
ஒரு நிருபர், பெங்களூரில் கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்திக்கச் செல்லும் குழுவில் அதிமுக இடம் பெறுமா? அதிமுகவை அழைப்பீர்களா என்று கேட்டபோது, கடுப்பானார் கருணாநிதி.
அந்த நிருபரைப் பார்த்து இதுபோன்ற கேள்விகளை தேவையில்லாமல் கேட்காதீர்கள். வேண்டும் என்றே இதுபோல கேட்கிறீர்கள். இது மக்கள் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சினை, இதை அரசியலாக்க வேண்டாம். சில பத்திரிக்கைகள் இதை அரசியலாக்க முயற்சிக்கின்றன என்றார் கோபத்துடன்.
கர்நாடக முதல்வரை சந்திக்கும் குழுவில் இடம்பெற அதிமுகவை அழைக்க மாட்டோம் என்றார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications