யூரோ 2004: ரஷ்யாவை வென்றது போர்ச்சுகல்
லிஸ்பன்:
போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்து வரும் யூரோ-2004 கால்பந்து ஆட்டப் போட்டியில் இன்று ரஷ்யா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வென்றது.
ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள போர்ச்சுகல், ரஷ்யா அணிகள் இன்று மோதின. முதல் போட்டியில் கிரீஸ் நாட்டு அணியிடம் தோல்வியடைந்ததால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் போர்ச்சுகல் களமிறங்கியது.
அந்த அணியின் மன்ச்சி மற்றும் ரூய் கோஸ்டா அடித்த அபாரமான கோல்கள் மூலம் ஆட்டம் முழுவதும் போர்ச்சுகல் ஆதிக்கம் செலுத்தியது. மாறாக ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் ரஷ்ய அணி தடுமாறியது.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் போர்ச்சுகல் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தினால், போர்ச்சுகல் காலிறுதிக்குத் தகுதி பெறும்.
அணியின் வெற்றி குறித்து கேப்டன் லூயிஸ் ஃபிகோ கூறுகையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறாவிட்டால் போட்டியை வெளியேற வேண்டிய நிலையில்தான் ஆடுகளத்தில் இறங்கினோம். இந்த சவாலை எல்லா வீரர்களும் புரிந்து கொண்டு விளையாடியதால்தான் வெற்றி பெற்றோம்.
ஸ்பெயின் அணியுடன் விளையாட வேண்டிய போட்டியும் முக்கியமான ஒன்றாகும். அந்த அணியில் நல்ல வீரர்கள் பலர் இருக்கிறார்கள். இருப்பினும் தாய் மண்ணில் விளையாடுவது எங்களுக்குச் சாதகமாகும் என்று கூறினார்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications