யூரோ 2004: காலிறுதியில் பிரான்ஸ் தோல்வி
லிஸ்பன்:
போர்ச்சுகலில் நடைபெற்று வரும் யூரோ 2004 கால்பந்தாட்டப் போட்டியின் காலிறுதிப் போட்டியில் நடப்புசாம்பியன் பிரான்ஸை 1-0 என்ற கோல் கணக்கில் கிரீஸ் வென்றது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் மிகவும் முயன்றும் கோல் போட முடியவில்லை. இரண்டாவதுபாதியில் ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் கிரீஸ் அணியின் ஏன்ஜெலஸ் சாரிஸ்டீஸ் ஒரு கோல் அடித்து தனதுஅணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இதனையடுத்து பிரான்ஸ் வீரர்கள் கோல் போடுவதற்கு மிகவும் போராடினார்கள். ஆனால் கடைசி வரை, கிரீஸ்வீரர்களின் தடுப்பாட்டத்தைத் தாண்டி கோல் போட முடியவில்லை. இதன் மூலம் போட்டித் தொடரிலிருந்துவெளியேறிய, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஜாம்பாவன்களின் வரிசையில் பிரான்சும்சேர்ந்தது.
அணியின் தோல்வி குறித்து பயிற்சியாளர் ஜாக் சான்டினி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
கிரீஸ் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறக் காரணமாக இருந்த கோலை அடித்த சாரிஸ்டீஸ் கூறுகையில், கிரீஸ்கால்பந்தாட்ட வரலாற்றில் இது பொன்னான தருணமாகும். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், கிரேக்கர்கள்அனைவரும் கொண்டாட வேண்டிய வெற்றியாகும் இது என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications