பாகிஸ்தான் பிரதமர் ஜமாலி ராஜிநாமா
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பிரதமர் ஜபருல்லாகான் ஜமாலி திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்தார். இடைக்காலபிரதமராக முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் சுஜத் ஹுசைன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே ஜமாலிக்கும், அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிவந்தது. இந்நிலையில் முஷாராப் தன்னை பதவியிலிருந்து நீக்கும் முன்பு பிரதமர் பதவியை ஜமாலி ராஜிநாமாசெய்தார்.
புதிய பிரதமராக தனது முஸ்லீம் கட்சித் தலைவர் ஹுசைனை நியமிப்பதாக ஜமாலி அறிவித்தார். பின்னர் தனதுஅமைச்சரவையைக் கலைப்பதற்கான அறிவிப்பையும் ஜமாலி வெளியிட்டார்.
இந் நிலையில் செய்தித்துறை அமைச்சர் ரஷீத் அகமது வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஹுசைன் இடைக்காலபிரதமராக இருப்பார். பாகிஸ்தான் செனட் சபையின் உறுப்பினராகவும், நிதியமைச்சராகவும் இருக்கும் செளகத்அஜீஸ் புதிய பிரதமராக நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications