யூரோ 2004: அரையிறுதியில் செக். குடியரசு
லிஸ்பன்:
யூரோ 2004 கால்பந்தாட்டத்தின் காலிறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு அணிடென்மார்க் அணியைத் தோற்கடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
செக் குடியரசின் ஜான் கோலர் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 49 வது நிமிடத்தில் தலையால் கோல் அடித்துஅணியின் கோல் கணக்கைத் துவக்கி வைத்தார். அவரது சகவீரரனா மிலன் பரோஸ் மேலும் இரண்டு கோல்கள்அடித்து செக் குடியரசை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்.
செக் குடியரசின் தாக்குதல் ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், டென்மார்க் அணி திணறியது. கடைசி வரை ஒருகோல் கூட அடிக்க முடியாமல் போட்டித் தொடரை விட்டு வெளியேறியது.
செக் குடியரசின் மிலன் பரோஸ் போட்டித் தொடரில் இதுவரை 5 கோல்கள் அடித்துள்ளார். அணியின் வெற்றிகுறித்து பரோஸ் கூறுகையில், ஆட்டம் தொடங்கும் முன்பு டென்மார்க்கை வீழ்த்துவது கடினமாக இருக்கும் என்றுகருதினோம். ஆனால் நாங்கள் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அரையிறுதி எங்களுக்கு முக்கியமானஆட்டமாகும். அதற்கு எங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது என்றார்.
நாளை மறுநாள் முதல் அரையிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் மற்றும் ஹாலந்து அணிகள் மோதுகின்றன.இரண்டாவது அரையிறுதி அடுத்த மாதம் 1ம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் செக் குடியரசு மற்றும்கிரீஸ் அணிகள் மோதுகின்றன.
இறுதி ஆட்டம் ஜூலை 4ம் தேதி நடைபெறுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications