முகம்மது அலி விவகாரம்: உள்துறை செயலருக்கு கல்தா
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர் ஆகியோர்சிக்கியுள்ள நிலையில், காவல்துறையை நிர்வகிக்கும் உள்துறை செயலாளர் சையத் முனீர் ஹோதா திடீரெனமாற்றப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக நலத்துறைச் செயலாளரான ஷீலா ராணி சுங்கத், உள்துறைச் செயலாளராகநியமிக்கப்பட்டுள்ளார்.
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் டிஐஜி முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர் ஆகியோரை சிபிஐ கைதுசெய்துள்ளது. இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து இருவரையும் தற்காலிகபணிநீக்கம் செய்து டிஜிபி கோவிந்த் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந் நிலையில் உள்துறை செயலாளர் சையத் முனீர் ஹோதா திடீரென்று மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு வேறுபொறுப்பு ஏதும் அளிக்கப்படவில்லை.
ஷீலா ராணி சுங்கத் நிர்வகித்து வந்த சுகாதாரத் துறை செயலாளர் பதவியில் வருவாய்த்துறை செயலாளராக இருந்துவந்த சுந்தரத் தேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நில நிர்வாகத்துறையின் ஆணையராக இருந்து வந்த சதபதி, வருவாய்த்துறை செயலாளராக்கப்பட்டுள்ளார்.
முகம்மது அலி விவகாரத்தில், சையத் முனீர் ஹோதாவை பலி கடா ஆக்கிவிட்டு தமிழக அரசு தன்னைக் காத்துக்கொள்ள முயல்வதாக ஒரு பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால், முகம்மத் அலியின் தவறுகள் தெரிந்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரைக் காப்பதிலேயேஹோதா ஆர்வம் காட்டியதாக இன்னொரு பிரிவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications