பாரதி பூமியில் இன்னும் எரியும் தீண்டாமைத் தீ !
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திற்கு அருகே உள்ள டி.சண்முகாபுரம் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள்,இன்னும் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தாழ்த்தப்பட்ட மக்கள் அடிமைகளாகவும், அவர்களை விட கேவலமாகவும் நடத்தப்பட்ட காலம் மலையேறிவிட்டது என்று நாம் கூறிக் கொண்டாலும் இன்னும் கூட அவர்களது அடிமைத் தளைகள் உடைக்கப்படாமல்இருப்பது அவ்வப்போது வெளிச்சத்தற்கு வரும் தீண்டாமைக் கொடுமை செய்திகள் வெளிப்படுத்தி வருகின்றன.
மகாகவி பாரதி பிறந்த எட்டயபுரத்திற்கு அருகே உள்ள டி.சண்முகாபுரம் கிராமத்தில் மிகவும் கேவலமான ஒருகொடுமை இன்னும் கூட நடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கிராமத்தில் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட ரெட்டியார்கள் அதிக அளவில் உள்ளனர். தலித்மக்களும் கணிசமான அளவில் உள்ளனர். இங்குள்ள விவசாய நிலங்கள் ரெட்டியார்களுக்கு சொந்தமானது. இந்தநிலங்களில்தான் சண்முகாபுரத்து தாழ்த்தப்பட்ட மக்கள் கூலிகளாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த பாவப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் படும் அவலம், கல் மனதையும் கரைய வைப்பதாகும். ரெட்டியார்களின்தீண்டாமை வெறி, நாய்களைக் கூட விட்டு வைக்கவில்லை. ரெட்டியார் வீட்டு ஆண் நாய்கள், தாழ்த்தப்பட்டமக்கள் வைத்துள்ள பெண் நாய்களுடன் சேர தடை விதித்துள்ளார்கள்.
தங்களது வீட்டு ஆண் நாய்களுடன், தாழ்த்தப்பட்ட பகுதி மக்களின் பெண் நாய்கள் சேர்ந்து காணப்பட்டால்உடனடியாக அந்த பெண் நாயை வெட்டிக் கொன்று விடுவார்களாம். மேலும், அந்த நாய்க்குரியவர் கடுமையானஅபராதம் கட்ட வேண்டி வருமாம்.
இதுமட்டுமல்லாது, பள்ளிக் கூடங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியாகவும், ரெட்டியார் வீட்டு மாணவர்கள்தனியாகவும் அமர வைக்கப்படுகிறார்கள். டீக் கடைகளில் ரெட்டியார் வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே டீபோன்றவை தரப்பட வேண்டும். மீறி கொடுத்ததால், ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஒருவரது டீக்கடை அங்கிருந்துஅகற்றப்பட்டு விட்டதாம்.
பொது கழிப்பறை, குளியலறைகளில் ரெட்டியார் வீட்டுப் பெண்கள் மட்டும்தான் நீராட வேண்டும், தாழ்த்தப்பட்டபெண்களுக்கு இங்கு குளிக்க அனுமதி இல்லை. இதனால், தாழ்த்தப்பட்ட மக்கள் வயல் வெளிகளில்தான் தங்களதுகாலைக் கடன் போன்றவற்றை முடிக்க வேண்டியுள்ளது.
ரெட்டியார்களை நம்பி பிழைத்து வருவதால் அவர்களை எதிர்த்து குரல் கொடுக்க முடியாத அவல நிலையில்உள்ளனர் இந்த பாவப்பட்ட மக்கள்.
அடிமைத் தளைக்கும், தீண்டாமைக்கும் எதிராக கொதித்து, கொந்தளித்த மகாகவியின் ஊருக்கு அருகேயேஇப்படியொரு அவலம் இன்னும் தொடருவது நம் அத்தனை பேருக்கும் மிகப் பெரிய அவமானம்.












Click it and Unblock the Notifications